நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் இந்தியா

By
|
பகிர்

உ.பி.பள்ளிவாசல் ஆய்வுக்கு எதிர்ப்பு தெரிவித்த 3 பேர் பலி

புது டெல்லி: 

உத்தர பிரதேச மாநிலம் சம்பல் நகரில் கோயிலை இடித்து ஜாமா பள்ளிவாசல் கட்டப்பட்டதாக கூறி ஆய்வுக்கு எதிர்ப்பு தெரிவித்தபோது மோதல் கலவரமாக மாறி 3 பேர் உயிரிழந்தனர்.

ஜாமா பள்ளிவாசலுக்கு முன்பாக அந்த இடத்தில் கோயில் இருந்ததாக கூறி வழக்கு தொடரப்பட்டதால், அங்கு ஆய்வு நடத்த நீதிமன்றம் உத்தரவிட்டது. தொல்லியல் துறை அதிகாரிகள் ஆய்வு நடத்த ஞாயிற்றுக்கிழமை சென்றனர்.இதற்கு அங்கிருந்தவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

தொடர்ந்து ஆய்வு பணி நடைபெற்றபோது போராட்டக்காரர்களுக்கும், பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீஸாருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இது கலவரமாக மாறியது. கலவரத்தை கட்டுப்படுத்த போலீஸார் கண்ணீர் புகை குண்டுகளை வீசி கும்பலை கலைத்தனர். அதன் பிறகு துப்பாக்கியால் சுட்டனர்.

இந்த வன்முறை சம்பவத்தில் போலீசார் சுட்டதில் நயீம், பிலால், நவ்மன் என 3 பேர் உயிரிழந்தனர். 30-க்கும்மேற்பட்ட போலீஸார் காயமடைந்தனர்.  சம்பலில் பாதுகாப்பு பலத்தப்பட்டுள்ளது. இண்டர்நெட் சேவை முடக்கப்பட்டுள்ளது.

உத்தர பிரதேச மாநிலத்தில் இடிக்கப்பட்ட பாபர் பள்ளிவாசல் இடத்தில் ராமர் கோயில் கட்ட உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து,அந்த மாநிலத்தில் உள்ள ஞானவாபி பள்ளிவாசல், ஷாயித் ஈத்கா பள்ளிவாசல் ஆகியவற்றுக்கு உரிமை கோரி வழக்குகள் தொடுக்கப்பட்டுள்ளன.

ஆர்யன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset