செய்திகள் இந்தியா
அமெரிக்கா குற்றம்சாட்டியும் அதானியை பிரதமர் மோடி கைது செய்யாதது ஏன்?: ராகுல் கேள்வி
புது டெல்லி:
லஞ்சம் மற்றும் முறைகேடு குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ள தொழிலதிபர் கௌதம் அதானியை பிரதமர் மோடி உடனடியாக கைது செய்யாதது ஏன் என்று மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி கேள்வி எழுப்பினார்.
சூரிய மின்சக்தி கொள்முதல் ஒப்பந்தங்களை மேற்கொள்ள மாநில அரசு அதிகாரிகளுக்கு 250 மில்லியன் டாலர் லஞ்சம் கொடுத்ததாக கௌதம் அதானி, அவரது உறவினர் சாகர் அதானி உள்ளிட்டோர் மீது அமெரிக்க நீதிமன்றத்தில் அந்நாட்டு அரசுத் தரப்பில் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
ராகுல் மேலும் கூறுகையில், இந்தியா மட்டுமன்றி அமெரிக்கச் சட்டங்களையும் தொழிலதிபர் அதானி மீறியிருப்பது இப்போது வெளியாகி உள்ளது.
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடரில் எதிர்க்கட்சிகள் இந்த விவகாரத்தை எழுப்பி வருகின்றனர்.
அதானியை மோடி அரசு பாதுகாப்பதால், இந்தியாவில் அவர் கைது செய்யப்படவோ அல்லது விசாரிக்கப்படவோ மாட்டார் என்பதை என்னால் உறுதியாக கூற முடியும். அதானியும் பிரதமரும் ஒன்று என்பதை நாட்டு மக்கள் தெரிந்து கொண்டனர்.
சிறு குற்றச்சாட்டுகளுக்காக மாநில முதல்வர்களையே கைது செய்யும் மோடி அரசு, ரூ.2,000 கோடி முறைகேட்டில் தொடர்புடைய அதானியை உடனடியாக கைது செய்யாமல் இருப்பது ஏன் என்றார் ராகுல்.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
June 14, 2026, 12:22 pm
அயோத்தியில் ராமர் கோயில் காணிக்கை பணம் திருட்டு: சமாஜ்வாதி தலைவர் அகிலேஷ் குற்றச்சாட்டு
June 14, 2026, 9:27 am
இந்தியாவில் டைப்-2 வகை சர்க்கரை நோயால் பெண்கள் பாதிக்கப்படுவது 47% அதிகரிப்பு
June 13, 2026, 7:41 pm
நிபா வைரஸ் இருந்தால் உடனடியாக மருத்துவமனைக்கு செல்ல அறிவுறுத்தல்
June 9, 2026, 9:37 am
இந்திய அரசின் எஃகு ஆலையில் பயங்கர வெடிப்பு: 8 தொழிலாளர்கள் உயிரிழப்பு
June 8, 2026, 1:31 pm
மத்திய பிரதேசத்தில் ரூ.80,000 ஊதியம் பெற்று வந்துள்ள 14 போலி மருத்துவர்கள்
June 4, 2026, 10:07 pm
