
செய்திகள் கலைகள்
ஆஸ்கர் விருது வென்ற முதல் கருப்பின ஹாலிவுட் நடிகர் காலமானார்
கலிபோர்னியா:
அமெரிக்காவின் கலிபோர்னியாவில் வசித்து வந்த ஹாலிவுட் நடிகர் சிட்னி போய்ட்டியர் (94) காலமானார். கருப்பினத்தை சேர்ந்த இவர், 1950 முதல் 1960 வரை சிறந்த கதாபாத்திரங்களில் நடித்து ரசிகர்களிடம் வரவேற்பு பெற்ற்றவர்.
அமெரிக்கா, பஹாமாஸ் ஆகிய நாடுகளின் குடியுரிமை பெற்றிருந்த இவர், பனாமா தீவை சேர்ந்த ஒரு ஏழை விவசாயியின் மகனாவார்.
1958ல் ஆஸ்கர் விருதை வெல்வதற்கான போட்டியில், ‘தி டிஃபையன்ட் ஒன்ஸ்’ படத்துக்காக சிட்னி போய்ட்டியரின் பெயர் முதலில் பரிந்துரைக்கப்பட்டது. ஆனால் அப்போது அது அவருக்கு கிடைக்கவில்லை.
6 ஆண்டுகளுக்கு பிறகு ‘லில்லிஸ் ஆஃப் தி ஃபீல்ட்’ படத்தில் நடித்ததற்காக ஆஸ்கர் விருதை அவர் பெற்றார். இதன்மூலம் ஆஸ்கர் விருது வென்ற முதல் கருப்பின நடிகர் என்ற பெருமையை பெற்றார்.
2009ல் அன்றைய அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா, அமெரிக்க நாட்டின் உயரிய விருது கொடுத்து அவரை கௌரவித்தார்.
சிட்னி போய்ட்டியர் மறைவுக்கு உலகம் முழுவதும் உள்ள திரைத்துறையினர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
தொடர்புடைய செய்திகள்
July 3, 2025, 10:23 pm
முழங்காலிட்டு பத்திரிகையைப் பெற்று கொண்ட விஜய் சேதுபதி
July 2, 2025, 10:41 am
மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் நடித்த இதயக்கனி படம் டிஜிட்டலில் மீண்டும் ரிலீஸ்
June 29, 2025, 5:45 pm
பாதுகாப்பு காரணங்களுக்காக Mercedes Maybach GLS 600 புல்லட் புரூப் கார் வாங்கிய சல்மான்கான்
June 27, 2025, 8:37 pm
ஆமிர் கானின் தங்கல் படத் தடைக்கு தற்போது வருந்தும் பாகிஸ்தான்
June 26, 2025, 2:52 pm
போதைப்பொருள் வழக்கு: நடிகர் கிருஷ்ணாவிடம் போலீசார் விடிய விடிய விசாரணை நடத்தினர்
June 26, 2025, 2:27 pm