நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

ஜார்ஜ் டவுனில் அதிர்ச்சி சம்பவம்: நிறுத்தப்பட்ட காரில் 55 வயது ஆண் சடலமாக மீட்பு

ஜார்ஜ் டவுன்: 

பினாங்கின் ஜார்ஜ் டவுனில் உள்ள ஜாலான் லிந்தாங் மெர்டேக்கா பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த காரொன்றில், 55 வயதுடைய ஆண் ஒருவர் உயிரிழந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பொதுமக்கள் அளித்த தகவலின் பேரில் இன்று காலை சுமார் 9.50 மணியளவில் சம்பவ இடத்துக்குச் சென்ற காவல்துறையினர், காரின் ஓட்டுநர் இருக்கையில் அமர்ந்திருந்த நிலையில் அந்த நபரின் சடலத்தை மீட்டனர்.

வடகிழக்கு மாவட்ட காவல்துறைத் தலைவர் உதவி ஆணையர் அப்துல் ரோசாக் முஹம்மத், காரை சந்தேகத்திற்கிடமான வகையில் நீண்ட நேரமாக நிறுத்தியிருப்பதை காலை 9.30 மணியளவில் கவனித்த துப்புரவுப் பணியாளர் ஒருவர் காவல்துறைக்கு தகவல் வழங்கியதாக தெரிவித்தார்.

விசாரணையில், உயிரிழந்தவர் புக்கிட் மெர்தாஜாமைச் சேர்ந்தவர் என்பது தெரியவந்துள்ளது. அவர் முழுமையான உடையுடன் ஓட்டுநர் இருக்கையில் இருந்ததோடு, கார் பூட்டப்படாத நிலையிலும் காணப்பட்டது.

சம்பவ இடத்திலும் உடலிலும் மேற்கொள்ளப்பட்ட ஆரம்ப பரிசோதனைகளில் குற்றச்செயல் அல்லது வன்முறைக்கான எந்த அறிகுறியும் கண்டறியப்படவில்லை. மேலும், உயிரிழந்தவருக்கு நீண்டகால உடல்நலப் பிரச்சினை இருந்ததுடன், மருத்துவ சிகிச்சையும் பெற்று வந்ததாக காவல்துறை தெரிவித்துள்ளது.

உடலின் நிலையை அடிப்படையாகக் கொண்டு, அவர் சுமார் நான்கு நாட்களுக்கு முன்னரே உயிரிழந்திருக்கலாம் என நம்பப்படுகின்றது.

சடலம் பிரேதப் பரிசோதனைக்காக பினாங்கு மருத்துவமனையின் தடயவியல் பிரிவுக்கு அனுப்பப்பட்டுள்ளதுடன், மேலதிக விசாரணை முடிவுகள் கிடைக்கும் வரை இந்த வழக்கு திடீர் மரணம் (Sudden Death Report - SDR) என வகைப்படுத்தப்பட்டுள்ளது.

இந்தச் சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

சங்கீர்த்தனா

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset