செய்திகள் உலகம்
வெனிசுலாவை உலுக்கிய இரட்டை நிலநடுக்கம்: குறைந்தது 32 பேர் பலி, 700-க்கும் மேற்பட்டோர் காயம்
கராகஸ்:
வெனிசுலாவை புதன்கிழமை தாக்கிய சக்திவாய்ந்த இரட்டை நிலநடுக்கங்கள் பெரும் மனிதாபிமான பேரழிவை ஏற்படுத்தியுள்ளன. இதுவரை கிடைத்த தகவலின்படி, குறைந்தது 32 பேர் உயிரிழந்துள்ளதுடன், 700-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். தலைநகர் கராகஸ், அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் பல கட்டிடங்கள் இடிந்து விழுந்ததால் மீட்புப் பணிகள் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் (USGS) வெளியிட்ட தகவலின்படி, கராகஸிலிருந்து மேற்கே சுமார் 160 கிலோமீட்டர் தொலைவில் முதலில் 7.2 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் பதிவானது. அதனைத் தொடர்ந்து ஒரு நிமிடத்திற்கும் குறைவான இடைவெளியில் 7.5 ரிக்டர் அளவிலான மற்றொரு சக்திவாய்ந்த அதிர்வு ஏற்பட்டது.
இடைக்கால ஜனாதிபதி டெல்சி ரோட்ரிகஸ், பல கட்டிடங்கள் முற்றிலும் இடிந்து விழுந்துள்ளதாகவும், இடிபாடுகளுக்குள் சிக்கியவர்களை மீட்க அவசரக் குழுக்கள் இரவு பகலாக போராடி வருவதாகவும் தெரிவித்தார். கராகஸ் அருகே அமைந்துள்ள லா குவைரா மாநிலம் மிகக் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
பருடா, சாக்காவோ மாவட்டங்களில் பல கட்டிடங்கள் சரிந்து விழுந்ததாக அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர். பல குடும்பங்கள் தங்களது உறவினர்களைத் தேடி பதற்றத்துடன் அலைந்து வருவதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதற்கிடையில், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், வெனிசுலாவுக்குத் தேவையான மனிதாபிமான உதவிகளை வழங்க அமெரிக்கா தயாராக இருப்பதாக அறிவித்துள்ளார்.
நிலநடுக்கத்தின் தாக்கம் குறித்து மதிப்பீடு செய்துள்ள USGS, உயிரிழப்புகளின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் அபாயம் இருப்பதாக எச்சரித்துள்ளது. இதனால் வெனிசுலா முழுவதும் அவசரநிலை சூழல் நிலவுகிறது.
மீட்புப் பணிகள் தொடரும் நிலையில், இடிபாடுகளுக்குள் இன்னும் பலர் சிக்கியிருக்கக்கூடும் என்ற அச்சம் நிலவுவதால், பலி எண்ணிக்கை மேலும் உயரக்கூடும் என அதிகாரிகள் கவலை தெரிவித்துள்ளனர்.
- சங்கீர்த்தனா
தொடர்புடைய செய்திகள்
October 7, 2026, 10:48 am
பிரான்ஸ் நாட்டில் மாணவர்களின் போராட்டம் தீவிரமடைந்தது: 250,000க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு
October 5, 2026, 5:28 pm
ரஷ்யாவில் மர்ம நுரையீரல் நோய்: 200 பேர் மருத்துவமனை கண்காணிப்பில் உள்ளனர்
October 4, 2026, 3:23 pm
பிரான்ஸ் அரசை உலுக்கும் மாணவர்கள் போராட்டம்: ஆசிரியர்களும் களத்தில் குதித்தனர்
October 2, 2026, 9:58 am
ஹௌதி போராட்டவாதிகள் சவுதி அரேபியாவின் மின்சார நிலையம் மீது தாக்குதல்: மதீனாவில் பரபரப்பு
October 2, 2026, 9:55 am
பிரேசில் உச்சநீதிமன்றம் வெளியே வெடிகுண்டுகள் இருப்பதாக சந்தேகம்: போலிஸ் விசாரணை
October 1, 2026, 5:32 pm
இந்தோனேசியா நாட்டின் வெளியுறவுத்துறை அமைச்சராக அர்மநாத நாசிர் நியமனம்
September 30, 2026, 8:57 pm
நடுவானில் விமானிகள் சண்டை: கடத்தல் முயற்சியா என்று இஸ்ரேல் பிரதமர் நெத்தன்யாஹு அவசர ஆலோசனை
September 30, 2026, 8:46 pm
