செய்திகள் வணிகம்
தொடர்ச்சியாக 4 ஆண்டுகள் பணவீக்கம் சரிந்துள்ளது: அர்மிசான்
கோலாலம்பூர்:
நாட்டின் பணவீக்க விகிதம் தொடர்ந்து நான்கு ஆண்டுகளாக படிப்படியாகக் குறைந்து வருவதாக உள்நாட்டு வர்த்தகம், வாழ்க்கைச் செலவுத் துறை அமைச்சர் டத்தோ அர்மிசான் முஹம்மத் அலி தெரிவித்துள்ளார். இந்த முன்னேற்றம், மலேசியாவின் பொருளாதார நிலைத்தன்மையை வெளிப்படுத்தும் முக்கிய சாதனையாகக் கருதப்படுகிறது.
அவர் வெளியிட்டுள்ள எழுத்துப்பூர்வ பதிலின்படி, பணவீக்க விகிதம் 2022ஆம் ஆண்டில் 3.3 சதவீதமாக இருந்த நிலையில், 2023ஆம் ஆண்டில் 2.5 சதவீதமாகவும், 2024ஆம் ஆண்டில் 1.8 சதவீதமாகவும் குறைந்தது. 2025ஆம் ஆண்டில் அது மேலும் சரிந்து 1.4 சதவீதமாகப் பதிவாகியுள்ளது.
அதேவேளை, நாட்டின் வாழ்க்கைச் செலவுக் குறியீடும் (Cost of Living Index) குறிப்பிடத்தக்க அளவில் குறைந்துள்ளது. 2023ஆம் ஆண்டில் 3.1 சதவீதமாக இருந்த குறியீடு, 2024ஆம் ஆண்டில் 1.9 சதவீதமாகச் சரிந்துள்ளது.
குடும்பங்களின் வருமானமும் தொடர்ந்து உயர்ந்து வருவது ஊக்கமளிக்கும் அம்சமாகும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார். 2022ஆம் ஆண்டில் 7,111 ரிங்கிட்டாக இருந்த சராசரி குடும்ப செலவிடத்தக்க வருமானம், 2024ஆம் ஆண்டில் 7,584 ரிங்கிட்டாக உயர்ந்துள்ளது.
“இந்த உயர்வு, மக்களின் வாங்கும் திறன் தொடர்ந்து வலுப்பெற்று வருவதையும், அன்றாட வாழ்க்கைத் தேவைகளைச் சமாளிக்கும் திறன் மேம்பட்டு வருவதையும் காட்டுகிறது,” என்று அவர் குறிப்பிட்டார்.
வாழ்க்கைச் செலவைக் கட்டுப்படுத்துவதில் அரசாங்கத்தின் வெற்றியை மதிப்பிடும்போது, உணவுப் பொருட்கள், வீட்டு வாடகை அல்லது சேவைச் செலவுகளின் விலைகளை மட்டும் அடிப்படையாகக் கொண்டு பார்க்கக் கூடாது என்றும் அவர் வலியுறுத்தினார்.
உலக பொருளாதார சூழல், புவிசார் அரசியல் பதற்றங்கள், நாணய மாற்று விகிதங்கள், காலநிலை மாற்றம், விநியோகச் சங்கிலி சிக்கல்கள் போன்ற பல்வேறு காரணிகள் விலை நிலவரத்தைப் பாதிப்பதாக அவர் சுட்டிக்காட்டினார்.
மேலும், அத்தியாவசியப் பொருட்களின் போதுமான விநியோகம், சேவைகளின் எளிதான அணுகல், மக்களின் வருமான உயர்வு ஆகியவை வாழ்க்கைச் செலவைக் கட்டுப்படுத்துவதில் முக்கிய பங்காற்றுகின்றன என்றும் அவர் தெரிவித்தார்.
பணவீக்கக் குறைவு, வாழ்க்கைச் செலவுக் குறியீட்டின் சரிவு, குடும்ப வருமான உயர்வு ஆகிய மூன்று முக்கிய பொருளாதாரச் சுட்டிக்காட்டுகளும், நாட்டின் பொருளாதாரம் சரியான திசையில் பயணித்து வருவதை வெளிப்படுத்துகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
- சங்கீர்த்தனா
தொடர்புடைய செய்திகள்
October 5, 2026, 10:07 pm
டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு தொடர்ந்து சரிவு
October 5, 2026, 3:40 pm
சீரகத் தூளில் பூச்சிக்கொல்லி மருந்து: உடனடியாக அகற்ற இந்திய அரசு உத்தரவு
September 26, 2026, 12:30 pm
வட அமெரிக்காவில் மேலும் 250 கடைகளை மூடும் Starbucks
September 11, 2026, 4:22 pm
ஃபேன்சி அகாடாமி அணிச்சல், பேக்கரி துறையில் திறமையான சாதனையாளர்களை உருவாக்கும்: விக்னேஸ்வரி நம்பிக்கை
September 11, 2026, 3:07 pm
இந்தியாவில் iPhone விலை 41% வரை அதிகரிப்பு
September 6, 2026, 5:39 pm
சிங்கப்பூரில் curry puff வாங்க சீனாவிலிருந்து வந்த விநியோக ஊழியர்
September 2, 2026, 4:36 pm
இந்தியாவின் முன்னணி பெருங்காய நிறுவனங்களான எல்ஜி, எவரெஸ்ட் நிறுவனப் பெருங்காயங்கள் விற்பனைக்கு தடை
August 31, 2026, 8:14 pm
சிங்கப்பூரில் உத்தரவாதமில்லாக் கடன் பெறுவோர் - மறுபரிசீலனை செய்ய 3 நாள் அவகாசம்
August 30, 2026, 9:46 pm
கே8 சரக்குகளைக் கையாள்வது குறித்து அரசும், ஏஜென்சிகளும் தெளிவுபடுத்த வேண்டும்
August 26, 2026, 11:58 am
