செய்திகள் மலேசியா
சிஎல்பி தேர்வுக்குப் பதிலாக புதிய வழக்கறிஞர் படிப்பு; திறமையான வழக்கறிஞர்களை உருவாக்கும்: வழக்கறிஞர் பார்த்திபன்
கோலாலம்பூர்:
சட்டப் பயிற்சிச் சான்றிதழ் (சிஎல்பி) தேர்வுக்குப் பதிலாக புதிய வழக்கறிஞர் படிப்பை (என்பிசி) அறிமுகப்படுத்தும் அரசாங்கத்தின் முன்மொழிவு ஒரு சரியான நடவடிக்கையாகக் கருதப்படுகிறது.
இது தொழில்முறைப் பயிற்சியை வலுப்படுத்துவதோடு, சட்ட உலகின் உண்மையான சவால்களை எதிர்கொள்ள முழுமையாகத் தயாராக இருக்கும் அதிக வழக்கறிஞர்களையும் உருவாக்குகிறது என்று வழக்கறிஞர் எம். பார்த்திபன் கூறினார்.
தற்போது நடைமுறையில் உள்ள சிஎல்பி முறை பெருகிவரும் மற்றும் சிக்கலான சட்டத் தொழிலின் உண்மையான தேவைகளை இனி பிரதிபலிக்கவில்லை.
மேலும் சிஎல்பி முறையின் மூலமான முந்தைய அனுபவம், தேர்வுகள், மனப்பாடம் செய்வதில் அதிக கவனம் செலுத்திய அணுகுமுறையானது, நீதிமன்றங்கள், சட்ட நிறுவனங்களில் எதிர்கொள்ளப்படும் சவால்களின் உண்மையான நிலவரத்தை வழங்கவில்லை என்பதைக் காட்டியது.
ஐந்து தேர்வுத் தாள்களை அடிப்படையாகக் கொண்ட இந்த முறை நீதிமன்றங்கள் மற்றும் சட்ட நிறுவனங்களில் உள்ள உண்மையான சவால்களைப் பிரதிபலிக்கவில்லை என்பதை சிஎல்பி மூலமான எனது அனுபவம் காட்டியது.
தேர்வுகள், மனப்பாடம் செய்வதில் மட்டுமே அதிக கவனம் செலுத்தும் ஒரு அமைப்பு, இன்றைய சட்டத் துறையின் உண்மையான தேவைகளை இனி பிரதிபலிப்பதில்லை.
மேலும் முறைப்படுத்தப்பட்ட செய்முறைப் பயிற்சி தேவைப்படுகிறது என்று அவர் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
June 25, 2026, 2:45 pm
சிங்கப்பூருக்குள் நுழையும் மலேசிய டாக்சிக்கு $15 கட்டணம் உயர்த்தப்படுகிறது
June 25, 2026, 2:10 pm
பள்ளத்தில் மனித எலும்புக்கூடு கண்டுபிடிப்பு: லஹாட் டத்து மக்களிடையே பரபரப்பு
June 25, 2026, 12:37 pm
6 வயது மாணவர் சேர்க்கையில் முழுமையான திட்டமிடல் அவசியம்: தாம் யூன் ஃபூக்
June 25, 2026, 12:04 pm
மலேசியத் தொழில்துறையில் அதிரடி முன்னேற்றம்: வேலைவாய்ப்பு 55% அதிகரித்ததாக அமைச்சர் அறிவிப்பு
June 25, 2026, 11:13 am
புவாட் ஷர்காஷி அம்னோவிலிருந்து விலகுவதாக அறிவித்தார்
June 25, 2026, 11:00 am
