நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

அணை உடைந்ததால் 32 வீடுகள் வெள்ளத்தில் மூழ்கின

கோலா லங்காட்: 

சிலாங்கூரின் பந்திங் பகுதியில் இன்று அதிகாலை ஏற்பட்ட அணை உடைப்பு சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதன் விளைவாக, தாமான் லங்காட் உத்தமா 2, RTB புக்கிட் சாங்காங் பகுதியில் உள்ள 32 வீடுகள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளன.

இன்று அதிகாலை 4.12 மணியளவில் அவசர அழைப்பு கிடைத்ததைத் தொடர்ந்து, பந்திங் தீயணைப்பு, மீட்பு நிலையத்திலிருந்து ஆறு வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து அனுப்பப்பட்டதாக சிலாங்கூர் மாநில தீயணைப்பு, மீட்புத் துறையின் (JBPM) செயல்பாட்டு பிரிவு உதவி இயக்குநர் அஷ்ருல் ரீசால் அஸ்பார் தெரிவித்தார்.

ஆய்வின்போது, குடியிருப்புப் பகுதியில் 0.3 மீட்டர் முதல் 0.9 மீட்டர் வரை வெள்ளநீர் தேங்கியிருப்பது கண்டறியப்பட்டது. சம்பவ இடத்திலிருந்து சுமார் 800 மீட்டர் தொலைவில் அணை உடைந்ததே இந்த வெள்ளப் பாதிப்புக்குக் காரணம் என அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.

நிலைமையை முன்னிட்டு, பாதிக்கப்பட்ட குடியிருப்பாளர்கள் எச்சரிக்கையுடன் செயல்பட்டு, பாதுகாப்பான பகுதிகளுக்கு உடனடியாக இடம்பெயருமாறு தீயணைப்பு, மீட்புத் துறை அறிவுறுத்தியுள்ளது.

அணை உடைப்பு காரணமாக ஏற்பட்ட இந்தத் திடீர் வெள்ளச் சம்பவம், அப்பகுதி மக்களிடையே அச்சத்தையும் கவலையையும் ஏற்படுத்தியுள்ளது. அதிகாரிகள் தொடர்ந்து நிலைமையைக் கண்காணித்து வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சங்கீர்த்தனா

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset