செய்திகள் மலேசியா
சிங்கப்பூருக்குள் நுழையும் மலேசிய டாக்சிக்கு $15 கட்டணம் உயர்த்தப்படுகிறது
ஜோகூர் பாரு:
சிங்கப்பூருக்குள் நுழையும் மலேசியாவில் பதிவு செய்யப்பட்ட டாக்சிகளுக்கான கட்டணம் ஒருமுறைப் பயணத்துக்கு 15 சிங்கப்பூர் வெள்ளியாக உயர்த்தப்படுகிறது.
ஆசியான் பொதுச் சேவை வாகன உரிமத்திற்கான அந்தக் கட்டணம் தற்போது 2 வெள்ளியாக உள்ளது.
புதிய மாற்றம் அடுத்த ஆண்டு 2027 ஜனவரி முதல் தேதியிலிருந்து நடப்புக்கு வரும் என்று நிலப் போக்குவரத்து ஆணையம் தெரிவித்தது.
மலேசியாவில் பதிவு செய்யப்பட்ட டாக்சிகளுக்கும் சிங்கப்பூரில் பதிவு செய்யப்பட்ட டாக்சிகளுக்கும் இடையிலான நிர்வாகச் செலவு வேறுபாட்டை ஈடுகட்ட தொகை உயர்த்தப்படுவதாக அது சொன்னது.
சிங்கப்பூருக்கும் மலேசியாவுக்கும் இடையே எல்லை தாண்டிய சேவைகளை வழங்கும் மலேசிய டாக்சிகளுக்கு அந்த உரிமம் வழங்கப்படுகிறது.
உரிமம் உள்ள மலேசிய டாக்சிகள் மட்டுமே அத்தகைய சேவைகளை வழங்க அனுமதி உண்டு.
சென்ற மாதம் சட்டவிரோதமாக எல்லை தாண்டிய போக்குவரத்துச் சேவைகளை வழங்கிய 14 பேர் பிடிபட்டனர்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
June 25, 2026, 4:17 pm
ஜொகூர் மாநிலத் தேர்தலில் வவாசான் கட்சி போட்டியிடாது: ஹம்சா
June 25, 2026, 2:10 pm
பள்ளத்தில் மனித எலும்புக்கூடு கண்டுபிடிப்பு: லஹாட் டத்து மக்களிடையே பரபரப்பு
June 25, 2026, 12:37 pm
