நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

மலேசியத் தொழில்துறையில் அதிரடி முன்னேற்றம்: வேலைவாய்ப்பு 55% அதிகரித்ததாக அமைச்சர் அறிவிப்பு

கோலாலம்பூர்: 

உலகளாவிய பொருளாதார நிச்சயமற்ற சூழ்நிலைகளுக்கு மத்தியிலும், மலேசியாவின் வேலைவாய்ப்பு சந்தை உறுதியான முன்னேற்றத்தை பதிவு செய்துள்ளதாக பொருளாதார அமைச்சர் டத்தோ ஸ்ரீ அக்மல் நஸ்ருல்லா முஹம்மத் நாசிர் தெரிவித்துள்ளார்.

அவரின் கூற்றுப்படி, மே மாதத்தில் 7,766 ஆக இருந்த வேலை இழப்புகளின் எண்ணிக்கை, ஜூன் 22 நிலவரப்படி 6,197 ஆகக் குறைந்துள்ளது. இதற்கிடையில், PERKESO-வின் MyFutureJobs தளம் மூலம் கிடைத்த வேலைவாய்ப்புகள் 55 சதவீதம் உயர்ந்துள்ளன.

ஏப்ரல் மாதத்தில் 12,119 பேருக்கு வழங்கப்பட்ட வேலைவாய்ப்புகள், மே மாதத்தில் 18,756 ஆக உயர்ந்துள்ளன. இதன் மூலம், 2026 ஆம் ஆண்டில் இதுவரை மொத்தம் 62,644 பேர் வேலைவாய்ப்பு பெற்றுள்ளனர்.

மேலும், இந்த முன்னேற்றம் அரசாங்கத்தின் PACE (Progressive Acceleration for Capability and Employment) எனும் 710 மில்லியன் ரிங்கிட் மதிப்பிலான பொருளாதார நிலைத்தன்மைத் திட்டத்தின் பலனாகும் என்றார் அவர்.

வேலைவாய்ப்பு பாதுகாப்பு, திறன் மேம்பாட்டிற்காக PERKESO வழியாக 580 மில்லியன் ரிங்கிட்டிற்க்கும் அதிகமான நிதி ஒதுக்கப்பட்டுள்ளதுடன், HRD Corp-க்கு 100 மில்லியன் ரிங்கிட், கிக் பொருளாதாரத் தொழிலாளர்களுக்கான பயிற்சிக்காக PTPK-க்கு 20 மில்லியன், TalentCorp-க்கு 10 மில்லியன் ரிங்கிட் வழங்கப்பட்டுள்ளது.

இந்த முயற்சிகளின் விளைவாக, 2026 ஏப்ரல் நிலவரப்படி நாட்டின் தொழிலாளர் பலம் 17.33 மில்லியனாக உயர்ந்துள்ளதுடன், பணியில் உள்ளோரின் எண்ணிக்கை 16.82 மில்லியனாக பதிவாகியுள்ளது.

மேலும், சிறு, நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு ஆதரவாக, SME Stabilisation Relief Facility (SME SRF) திட்டத்தின் கீழ் 5 பில்லியன் ரிங்கிட் நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாகவும், அதில் 700 மில்லியன் ரிங்கிட்டிற்க்கும் அதிகமான தொகை 1,000-க்கும் மேற்பட்ட நிறுவனங்களுக்கு அங்கீகரிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

வேலையின்மை விகிதம் மார்ச் மாதத்தில் 2.9 சதவீதமாக இருந்து ஏப்ரலில் 3.0 சதவீதமாக சற்று உயர்ந்தாலும், அது இன்னும் 4 சதவீதத்திற்குக் கீழே நிலைத்திருப்பது நாட்டின் தொழிலாளர் சந்தையின் வலிமையை எடுத்துக்காட்டுவதாக அவர் கூறினார்.

அதேவேளை, 2026 ஆம் ஆண்டில் அதிகளவிலான வேலை இழப்புகள் ஜனவரி மாதத்தில் பதிவாகியிருந்தன. அப்போது 10,658 பேர் வேலை இழந்திருந்தனர். புதிய ஆண்டிற்கான நிறுவனங்களின் மறுசீரமைப்பு நடவடிக்கைகளே அதற்குக் காரணமாக அமைந்ததாக அவர் விளக்கினார்.

எரிசக்தி நெருக்கடி, உலக பொருளாதார சவால்களின் தாக்கம் தொடர்பான தற்போதைய நிலைமை குறித்து அமைச்சரின் சிறப்பு அறிக்கை, வரும் ஜூன் 29ஆம் தேதி நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சங்கீர்த்தனா

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset