நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

மஇகாவின் 80ஆம் ஆண்டு நிறைவு விழாவை முன்னிட்டு மருத்துவ முகாம்; 152 தொகுதிகளில் நடைபெறும்: டத்தோ முருகையா

கோலாலம்பூர்:

மஇகாவின் 80ஆம் ஆண்டு நிறைவு விழாவை முன்னிட்டு மருத்துவ முகாம் நாடு முழுவதும் 152 தொகுதிகளில் நடைபெறும்.

மஇகா உதவித் தலைவரும் விழா ஒருங்கிணைப்பாளருமான டத்தோ முருகையா இதனை கூறினார்.

மஇகா இவ்வாண்டும் 80ஆம் ஆண்டு நிறைவு விழாவை கொண்டாடுகிறது.

இதன் அடிப்படையில் நாடு முழுவதும் மஇகா பல நிகழ்ச்சிகளை செய்து வருகிறது.

கோலாலம்பூர் ஸ்ரீ மகா மாரியம்மன் ஆலயத்தில் சிறப்பு பிரார்த்தனைகளுடன் இவ்விழா தொடங்கியது.

இதைத் தொடர்ந்து குடும்ப தின விழா, விளையாட்டு போட்டிகள் சிறப்பான முறையில் நடைபெற்றது.

அவ்வகையில் வரும் ஜூன் 28ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை மருத்துவ முகாம் நடைபெறவுள்ளது.

டாக்டர் நோவா தலைமையில் இம்மருத்துவ முகாம் நாடு முழுவதும் உள்ள 152 தொகுதிகளிலும் இந்த மருத்துவ முகாம் நடைபெறவுள்ளது.

நமது இந்தியர்களை தவிர்த்து மற்ற இன மக்களும் இந்த மருத்துவ முகாமில் கலந்து கொணடு பயன் பெற வேண்டும் என்று டத்தோ முருகையா கூறினார்.


இதனிடையே வரும் ஜூலை 4ஆம் தேதி மஇகாவின் பேச்சு போட்டிகள் நடைபெறுவதாக இருந்தது.

ஆனால் ஜொகூர் மாநில தேர்தலால் இந்த போச்சு போட்டிகள் ஆகஸ்ட் முதல்
வாரத்திற்கு மாற்றப்பட்டுள்ளது.

அதே வேளையில் நெடுந்தூரம் ஓட்டப் போட்டி வரும் ஜூலை 27ஆம் தேதி நடைபெறும் என்று அவர் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset