செய்திகள் மலேசியா
வீட்டுப் பணி பெண்களுக்கான காப்புறுதி திட்டம்; முதலாளிகளை காப்பதுடன் உதவும் இலக்குடன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது: முத்து
கோலாலம்பூர்:
வீட்டுப் பணி பெண்களுக்கான காப்புறுதி திட்டம் முதலாளிகளை காப்பதுடன் உதவும் இலக்குடன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
ஜிமார்ட் நிறுவனத்தின் தலைமை இயக்குநர் முத்து இதனை கூறினார்.
மக்களுக்கு எளிமையான குறிப்பாக இலக்கவியல் வாயிலாக காப்புறுதி சேவையை வழங்க வேண்டும் என்பதே ஜிமார்ட் நிறுவனத்தின் முதன்மை நோக்கமாகும்.
இதை அடிப்படையில் தான் இந்நிறுவனம் தோற்றுவிக்கப்பட்டது.
இந்நிலையில் ஜிமார்ட் நிறுவனம் பாபா எனப்படும் மலேசியாவில் உரிமம் பெற்ற வெளிநாட்டு பணியாளர் நிறுவனங்களின் சங்கத்துடன் புதிய ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது.
இந்த ஒப்பந்தத்தின் கீழ் வீட்டுப் பணி பெண்களுக்கான காப்புறுதி திட்டத்தை ஜிமார்ட் வழங்கவுள்ளது.
குறிப்பாக பல வீட்டு பணிப் பெண்கள் தற்போது ஓடி விடுகிறார்கள். அப்படி ஓடினால் முதலாளிகளுக்கு 5,000 ரிங்கிட் இழப்பீடு வழங்கப்படும்.
அதே வேளையில் இப்பணி பெண்களுக்கு 10 ஆயிரம் ரிங்கிட் வரை மருத்துவ காப்பீடும் வழங்கப்படும்.
இப்படி கிட்டத்தட்ட 7 திட்டங்களின் கீழ் முதலாளிகளுக்கு காப்புறுதி பாதுகாப்பு வழங்கப்படுகிறது.
மேலும் மலேசியாவில் உரிமம் பெற்ற வெளிநாட்டு பணியாளர் நிறுவனங்களின் சங்கத்தின் வாயிலாகவே முதலாளிகள் இந்த காப்புறுதியை வாங்க முடியும்.
இக்காப்புறுதி முதலாளிகளுக்கு பெரும் பயனாக இருக்கும் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது.
இவ்வேளையில் அச்சங்கத்தின் தலைவர் டத்தோ ஃபூ யோங் ஓய் உட்பட அனைவருக்கும் எனது நன்றிகள் என்று முத்து கூறினார்.
மேல்விவரங்களுக்கு gmat.com.my
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
June 25, 2026, 4:17 pm
ஜொகூர் மாநிலத் தேர்தலில் வவாசான் கட்சி போட்டியிடாது: ஹம்சா
June 25, 2026, 2:45 pm
சிங்கப்பூருக்குள் நுழையும் மலேசிய டாக்சிக்கு $15 கட்டணம் உயர்த்தப்படுகிறது
June 25, 2026, 2:10 pm
பள்ளத்தில் மனித எலும்புக்கூடு கண்டுபிடிப்பு: லஹாட் டத்து மக்களிடையே பரபரப்பு
June 25, 2026, 12:37 pm
