செய்திகள் மலேசியா
புவாட் ஷர்காஷி அம்னோவிலிருந்து விலகுவதாக அறிவித்தார்
ஜொகூர்பாரு:
அம்னோ உச்சமன்ற உறுப்பினர், டத்தோ டாக்டர் முஹம்மது புவாட் ஷர்காஷி, இன்று முதல் கட்சியிலிருந்து உடனடியாக விலகுவதாக அறிவித்தார்.
ஜொகூர் மாநில சட்டமன்றத்தின் முன்னாள் சபாநாயகராகவும் இருந்த அவர்,
ஜொகூர் அம்னோ இனி சுதந்திரமாக முடிவெடுக்க முடியாத நிலையில், அரண்மனையின் கட்டுப்பாட்டில் இருப்பதால் இந்த முடிவு எடுக்கப்பட்டதாகக் கூறினார்.
இன்று ஜூன் 25 முதல் அமலுக்கு வரும் வகையில், நான் அம்னோவிலிருந்து உடனடியாக வெளியேறுவதை அறிவிக்கிறேன். எனவே, அம்னோ என்னை நீக்குவதற்கு சிரமப்படத் தேவையில்லை.
மேலும், கட்சிக்குப் பின்னால் குத்துவதாகக் குற்றம் சாட்டப்படாமல், எனது மாறுபட்ட கருத்துக்களை வெளிப்படுத்துவதையும் இது எளிதாக்குகிறது.
மலாய்க்காரர்கள், மலேசியர்களுக்காக நான் நேசிக்கும், மதிக்கும் ஒரு தளமான அம்னோவை இப்போது நான் சுதந்திரமாக விமர்சிக்க முடியும் என்று அவர் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
June 25, 2026, 11:00 am
அணை உடைந்ததால் 32 வீடுகள் வெள்ளத்தில் மூழ்கின
June 25, 2026, 10:42 am
ஆவணச் சரிபார்ப்பில் அலட்சியம் வேண்டாம்: முதலாளிகளுக்கு JPN எச்சரிக்கை
June 24, 2026, 8:50 pm
ரோன் 95, ரோன் 97 பெட்ரோல்களின் விலைகள் 25 சென் குறைந்தது
June 24, 2026, 8:47 pm
ஜொகூரில் தேசிய முன்னணி ஆட்சி தொடர்ந்தால் கூட்டணி அரசாங்கம் அமையாது: ஓன் ஹபிஸ்
June 24, 2026, 6:46 pm
