நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

பள்ளத்தில் மனித எலும்புக்கூடு கண்டுபிடிப்பு: லஹாட் டத்து மக்களிடையே பரபரப்பு

லஹாட் டத்து:

சபாவின் லஹாட் டத்துவில் உள்ள புக்கிட் தாமான் பெர்தாமா 1 பகுதியில் நேற்று மனித எலும்புக்கூடு ஒன்று பள்ளத்தில் கண்டுபிடிக்கப்பட்ட சம்பவம் அப் பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

காலை சுமார் 10.53 மணியளவில் பொதுமக்கள் வழங்கிய தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர், பள்ளத்தில் மனித எலும்புக்கூடு இருப்பதை உறுதிப்படுத்தினர்.

லஹாட் டத்து துணை மாவட்ட காவல் துறைத் தலைவர் சூப்பிரிண்டெண்ட் ஜிம்மி பன்யாவ், கண்டுபிடிக்கப்பட்ட எலும்புக்கூடு மேலதிக பரிசோதனைக்காக லஹாட் டத்து மருத்துவமனையின் தடயவியல் பிரிவுக்கு அனுப்பப்பட்டுள்ளது.

எலும்புக்கூட்டின் அடையாளம், மரணத்திற்கான காரணத்தைக் கண்டறியும் நடவடிக்கைகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. விசாரணை முடிவுகள் வெளியாகும் வரை இந்த வழக்கு திடீர் மரணம் (SDR) என வகைப்படுத்தப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

இதனிடையே, காணாமல் போன குடும்ப உறுப்பினர்கள் தொடர்பான தகவல்கள் அல்லது இந்தச் சம்பவம் குறித்த ஏதேனும் தகவல்கள் உள்ளவர்கள் காவல்துறையுடன் ஒத்துழைக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

மேலும், விசாரணையைப் பாதிக்கும் வகையில் சமூக ஊடகங்களில் ஆதாரமற்ற தகவல்களையோ ஊகங்களையோ பரப்ப வேண்டாம் என்றும், சம்பந்தப்பட்ட குடும்பத்தினரின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்க வேண்டும் என்றும் பொதுமக்களுக்கு காவல்துறை அறிவுறுத்தியுள்ளது.

மர்மத்தை சூழ்ந்த இந்த எலும்புக்கூடு கண்டுபிடிப்பு, அப்பகுதி மக்களிடையே பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ள நிலையில், காவல்துறையின் விசாரணை முடிவுகள் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளன.

சங்கீர்த்தனா

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset