நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

பேராக்கில் டிங்கி பாதிப்பு அதிகரிப்பு; இவ்வாண்டு 1,248 சம்பவங்கள் பதிவு, ஒருவர் மரணம்: சிவநேசன்

ஈப்போ:

நாட்டின் பல மாநிலங்களில் டெங்கி காய்ச்சல் பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், பேரா மாநிலத்திலும் நோய்த் தொற்று அதிகரித்துள்ளது.

மாநில ஆட்சிக் குழு உறுப்பினர் டத்தோ அ. சிவநேசன் இதனை தெரிவித்தார்

இந்த வாரத்தில் மட்டும் 81 டிங்கி சம்பவங்கள் பதிவாகியுள்ளன. இது கடந்த வாரத்துடன் ஒப்பிடுகையில் 18.5 சதவீத உயர்வாகும்.

இந்த ஆண்டு ஜனவரி 1 முதல் தற்போது வரை மொத்தம் 1,248 டிங்கி சம்பவங்கள் பதிவாகியுள்ளன. கடந்த ஆண்டின் இதே காலகட்டத்துடன் ஒப்பிடுகையில் இது 18.6 சதவீதம் அதிகமாகும்.

மாநிலத்தில் அதிகளவு பாதிப்பு கிந்தா மாவட்டத்தில் பதிவாகியுள்ளது.

கிந்தா மாவட்டத்தில் மட்டும் இந்த வாரத்தில் 68 சம்பவங்கள் பதிவாகியுள்ளன.

கடந்த ஆண்டின் இதே காலகட்டத்துடன் ஒப்பிடுகையில் அப்பகுதியில் 83.95 சதவீத உயர்வு காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டது.

டிங்கி நோய் பரவல் அதிகமாக உள்ள பகுதிகள் அடையாளம் காணப்பட்டு, சம்பந்தப்பட்ட இடங்களில் சுகாதார அதிகாரிகள் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளனர் என்று இன்று பேரா மாநில அரசாங்க செயலகத்தில் நடைபெற்ற செய்தியாளர்கள் கூட்டத்தில் இதனைத் தெரிவித்தார்.

மேலும் பேசிய அவர் இந்த ஆண்டு பேராக் மாநிலத்தில் டிங்கி காய்ச்சலால் ஒரு மரணம் பதிவாகியுள்ளது.

53 வயதுடைய ஆண் ஒருவர் கடந்த ஜனவரி மாதம் சிலிம் ரிவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்ததாக தெரிவித்தார்.

டிங்கி பாதிப்பை கட்டுப்படுத்த பொதுமக்கள் தங்களது சுற்றுப்புறங்களை தூய்மையாக வைத்திருக்க வேண்டும் என்றும், நீர் தேங்கும் இடங்களை அகற்றுவதில் கவனம் செலுத்த வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்

மேலும், காய்ச்சல், தலைவலி, உடல்வலி உள்ளிட்ட டிங்கி அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக அருகிலுள்ள மருத்துவமனைகளில் பரிசோதனை செய்து சிகிச்சை பெறுமாறும் பொதுமக்களுக்கு அறிவுறுத்தினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset