செய்திகள் மலேசியா
அடிப்படை உயிர்காக்கும் ஆதரவு பயிற்சியை நடத்தியதற்காக பத்து காஜா சீர்திருத்த மையம் மலேசிய சாதனை புத்தகத்தில் இடம் பிடித்தது
பத்துகாஜா:
நாட்டிலேயே முதன்முறையாக கைதிகளுக்கான அங்கீகரிக்கப்பட்ட அடிப்படை உயிர்காக்கும் ஆதரவு பயிற்சி BLS படிப்பை நடத்தியதற்காக பத்து காஜா சீர்திருத்த மையம் மலேசிய சாதனை புத்தகம் அங்கீகாரம் பெற்றுள்ளது.
பத்து காஜா மருத்துவமனையுடன் இணைந்து நடத்தப்பட்ட இப்பயிற்சியில் 12 ஆண்கள், 30 பெண்கள் என மொத்தம் 42 கைதிகள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட்டு பங்கேற்றனர்.
இவர்களுக்கு வழங்கபட்ட அடிப்படை உயிர்காக்கும் பயிற்சி சான்றிதழ், கைதிகள் விடுதலைக்குப் பின் வேலைவாய்பை பெற உதவும் என்று
பேரா மாநில சிறைத்துறை இயக்குநர் துணை ஆணையர் ஃபைரூஸ் அஹ்மத் இந்த நிகழ்வை நிறைவு செய்து உரையாற்றியபோது குறிப்பிட்டார்.
இந்த பயிற்சி கோட்பாடு, செய்முறை மற்றும் சுகாதார அமைச்சு நடத்திய தேர்வு என முழுமையாக அமைந்தது.
மருத்துவ நிபுணர்கள் நேரடி வழிகாட்டுதல் வழங்கினர்.
இந்த அங்கீகாரம் நாட்டின் கைதிகள் மறுவாழ்வு முறையில் புதிய மைல்கல் என்றார்.
பத்து காஜா சீர்திருத்த மையத்தில் நேற்று நடந்தது.
பத்து காஜா மருத்துவமனை இயக்குநர் டாக்டர் ஜெ. ஜெயகுமரன் இந்த நிகழ்வில் கலந்துக்கொண்டு பேசியபோது 42 பேரும் முழுமையாக தேர்சி பெற்று அடிப்படை உயிர்காக்கும் பயிற்சியாளர்களாக அங்கீகரிக்கப்பட்டனர் என்றார்
கைதிகளுக்கு கூடுதல் மதிப்பு சேர்கும் வகையில் இப்பயிற்சி அமைந்தது" என்றார்.
மலேசிய சாதனை புத்தக அதிகாரி சிட்டி ஹஜார் ஜோகோர், சீர்திருத்த மையம் மற்றும் மருத்துவமனைக்கு அங்கீகார சான்றிதழை வழங்கினார்.
சிறைச்சாலையில் கைதிகளுக்கான உயிர்காக்கும் திறன் பயிற்சி – மலேசிய சாதனை புத்தகத்தில் அங்கீகாரம் பெற்றது வரலாற்றுச் சாதனை
சிறைச்சாலையில் முதன்முறையாக கைதிகளுக்கான உயிர்காக்கும் திறன் (Basic Life Support – BLS) மற்றும் முதலுதவி (First Aid) பயிற்சித் திட்டத்தை வெற்றிகரமாக நடத்தியதாக பத்துகாஜா சீர்திருத்த மைய இயக்குனர் எஸ். தனபால் கூறினார்.
இந்தத் திட்டத்தின் முக்கிய நோக்கம், கைதிகள் தங்களுடன் இருக்கும் மற்ற கைதிகளுக்கு அவசரகாலங்களில் உடனடியாக உதவக்கூடிய திறனைப் பெறுவதாகும்.
ஆரம்பத்தில் இந்தப் பயிற்சியை மலேசியா மலேசிய சாதனை புத்தகத்தில் பதிவு செய்ய வேண்டும் என்ற எண்ணமே இல்லை.
எங்களின் பிரதான நோக்கம், சிறைச்சாலைக்குள் யாருக்காவது உடல்நலக் குறைவு அல்லது அவசரநிலை ஏற்பட்டால், அருகில் இருக்கும் கைதிகளே முதலில் உதவி செய்யக்கூடியவர்களாக உருவாக வேண்டும் என்பதுதான்.
மேலும், கைதிகள் தண்டனைக் காலத்தை முடித்து சமூகத்திற்குத் திரும்பிய பின்னரும், இந்தப் பயிற்சி அவர்களுக்கு பயனுள்ளதாக அமையும்.
அவசரநிலைகளில் பொதுமக்களுக்கு உதவி செய்து உயிர்களைக் காப்பாற்றும் திறனை அவர்கள் பெறுவார்கள். சமூகத்தில் மீண்டும் நல்ல குடிமக்களாக இணைவதற்கும் இந்தத் திறன் உதவியாக இருக்கும் என்று அவர் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
June 25, 2026, 12:37 pm
6 வயது மாணவர் சேர்க்கையில் முழுமையான திட்டமிடல் அவசியம்: தாம் யூன் ஃபூக்
June 25, 2026, 11:13 am
புவாட் ஷர்காஷி அம்னோவிலிருந்து விலகுவதாக அறிவித்தார்
June 25, 2026, 11:00 am
அணை உடைந்ததால் 32 வீடுகள் வெள்ளத்தில் மூழ்கின
June 25, 2026, 10:42 am
ஆவணச் சரிபார்ப்பில் அலட்சியம் வேண்டாம்: முதலாளிகளுக்கு JPN எச்சரிக்கை
June 24, 2026, 8:50 pm
ரோன் 95, ரோன் 97 பெட்ரோல்களின் விலைகள் 25 சென் குறைந்தது
June 24, 2026, 8:47 pm
