செய்திகள் வணிகம்
மத்திய கிழக்கு பதற்றத்தால் அமெரிக்க டாலருக்கு எதிராக ரிங்கிட் சரிவு
கோலாலம்பூர்:
மேற்கு ஆசியாவின் புவியியல் அரசியல் பதற்றங்களை முதலீட்டாளர்கள் கவனித்து வரும் நிலையில், மலேசிய ரிங்கிட் திங்கட்கிழமை அமெரிக்க டாலருக்கு எதிராக சற்றே பலவீனமாகத் திறக்கப்பட்டது. இருப்பினும், பிற முக்கிய, பிராந்திய நாணயங்களுடன் ஒப்பிடும்போது ரிங்கிட் வலுப்பெற்று கலவையான போக்கைக் காட்டியது.
காலை 8 மணியளவில், ரிங்கிட் அமெரிக்க டாலருக்கு எதிராக 4.1350/1445 என்ற நிலைக்கு சரிந்தது. இது கடந்த வெள்ளிக்கிழமை முடிவில் இருந்த 4.1340/1395 அளவுடன் ஒப்பிடுகையில் சிறிய சரிவாகும்.
அமெரிக்கா–ஈரான் பேச்சுவார்த்தைகள் தொடர்பான முன்னேற்றங்களைச் சந்தை பங்கேற்பாளர்கள் நெருக்கமாக கண்காணித்து வருவதால், ரிங்கிட் எச்சரிக்கையுடன் வர்த்தகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுவதாக மலேசிய முவமாலாட் வங்கியின் தலைமைப் பொருளாதார நிபுணர் டாக்டர் முஹம்மத் அப்ஸானிசம் அப்துல் ரஷித் தெரிவித்தார்.
ஹோர்முஸ் ஜலசந்தி வழியாக கடந்த வார இறுதியில் தொடர்ந்து மில்லியன் கணக்கான எண்ணெய் பீப்பாய்கள் கடத்தப்பட்டதாக வெளியான தகவல்கள், கச்சா எண்ணெய், திரவ இயற்கை எரிவாயு விநியோகத்தில் உடனடி ஆபத்து குறைவதாக சந்தையில் நம்பிக்கையை உருவாக்கியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
அதே நேரத்தில், அமெரிக்க பெடரல் ரிசர்வ் வெளியிடவுள்ள தனிநபர் நுகர்வு செலவுகள் (PCE) எனும் முக்கிய பணவீக்க தரவுகள் இந்த வாரம் சந்தையின் கவனத்தை ஈர்க்கும் முக்கிய காரணியாக இருக்கும் என்றும் அவர் தெரிவித்தார்.
தொடர்ந்து, உலகளாவிய சந்தையில் கச்சா எண்ணெய் விலையும் உயர்வைக் கண்டுள்ளது. WTI எண்ணெய் பீப்பாய் ஒன்றுக்கு 77.69 அமெரிக்க டாலராகவும், பிரெண்ட் எண்ணெய் 81.60 அமெரிக்க டாலராகவும் வர்த்தகம் செய்யப்பட்டது.
நாணய சந்தையில், ரிங்கிட் ஜப்பானிய யென், பிரிட்டிஷ் பவுண்டுக்கு எதிராக வலுப்பெற்றது. ஆனால் யூரோவுக்கு எதிராக சற்று பலவீனமடைந்தது.
பிராந்திய நாணயங்களில், சிங்கப்பூர் டாலர், தாய் பாத்துக்கு எதிராக ரிங்கிட் வலுப்பெற்ற நிலையில், இந்தோனேசிய ரூபியா, பிலிப்பைன் பெசோவுக்கு எதிராக பெரிதாக மாற்றமின்றி நிலைத்திருந்தது.
மொத்தத்தில், உலக அரசியல் பதற்றங்கள், எண்ணெய் சந்தை நகர்வுகளுக்கு இடையில், ரிங்கிட் “எச்சரிக்கை–கலவை–நிலைத்தன்மை” என்ற மூன்று நிலை வர்த்தக போக்கில் நகர்வதாக சந்தை ஆய்வாளர்கள் மதிப்பிடுகின்றனர்.
இதற்கிடையில், இன்றைய நிலவரப்படி இந்திய ரூபாய் ஒரு ரிங்கிட்டிற்கு 22.73 காசாக சரிந்துள்ளது. டாலருக்கு எதிராக இந்திய ரூபாய் 94.41 காசுக்கு விற்பனை செய்யப்படுகிறது.
- சங்கீர்த்தனா
தொடர்புடைய செய்திகள்
October 5, 2026, 10:07 pm
டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு தொடர்ந்து சரிவு
October 5, 2026, 3:40 pm
சீரகத் தூளில் பூச்சிக்கொல்லி மருந்து: உடனடியாக அகற்ற இந்திய அரசு உத்தரவு
September 26, 2026, 12:30 pm
வட அமெரிக்காவில் மேலும் 250 கடைகளை மூடும் Starbucks
September 11, 2026, 4:22 pm
ஃபேன்சி அகாடாமி அணிச்சல், பேக்கரி துறையில் திறமையான சாதனையாளர்களை உருவாக்கும்: விக்னேஸ்வரி நம்பிக்கை
September 11, 2026, 3:07 pm
இந்தியாவில் iPhone விலை 41% வரை அதிகரிப்பு
September 6, 2026, 5:39 pm
சிங்கப்பூரில் curry puff வாங்க சீனாவிலிருந்து வந்த விநியோக ஊழியர்
September 2, 2026, 4:36 pm
இந்தியாவின் முன்னணி பெருங்காய நிறுவனங்களான எல்ஜி, எவரெஸ்ட் நிறுவனப் பெருங்காயங்கள் விற்பனைக்கு தடை
August 31, 2026, 8:14 pm
சிங்கப்பூரில் உத்தரவாதமில்லாக் கடன் பெறுவோர் - மறுபரிசீலனை செய்ய 3 நாள் அவகாசம்
August 30, 2026, 9:46 pm
கே8 சரக்குகளைக் கையாள்வது குறித்து அரசும், ஏஜென்சிகளும் தெளிவுபடுத்த வேண்டும்
August 26, 2026, 11:58 am
