செய்திகள் மலேசியா
ஜோகூர் வாக்காளர்களுக்காக கூடுதல் ETS ரயில்களை KTMB அறிவித்துள்ளது, டிக்கெட் விற்பனை இன்று தொடங்குகிறது
ஜோகூர் பாரு:
ஜோகூர் மாநிலத் தேர்தலுக்காகத் தங்கள் சொந்த ஊர்களுக்குப் பயணம் செய்யும் வாக்காளர்களின் வசதிக்காக, KTM நிறுவனம் கூடுதல் ETS ரயில் சேவைகளை அறிவித்துள்ளது.
டிக்கெட் விற்பனை இன்று மதியம் தொடங்கும் என்றும், அவற்றை KTMB மொபைல் செயலி, KITS ஸ்டைல் செயலி, அதிகாரப்பூர்வ இணையதளமான online.ktmb.com.my அல்லது KTMB டிக்கெட் விற்பனையகங்கள் வழியாக வாங்கலாம் என்றும் KTMB தெரிவித்துள்ளது.
“வாக்களிக்க சொந்த ஊர்களுக்குச் செல்லும் பயணிகளின் வசதிக்காக இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. வரவிருக்கும் மாநிலத் தேர்தலுக்காக, ஜூலை 10 முதல் 12 வரை பயணம் செய்ய தெற்கு நோக்கிய கூடுதல் ETS ரயில் சேவைகள் கிடைக்கும்,” என்று அது குறிப்பிட்டிருந்தது.
ஜூன் 1 அன்று மாநில சட்டமன்றம் கலைக்கப்பட்டதைத் தொடர்ந்து, ஜோகூர் மாநிலத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நாளை ஜூலை 11 என தேர்தல் ஆணையம் நிர்ணயித்துள்ளது.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
June 19, 2026, 6:00 pm
நீதித்துறையின் உயிர்நாடி மக்களின் நம்பிக்கை: தலைமை நீதிபதியின் ஆழமான எச்சரிக்கை
June 19, 2026, 5:28 pm
UNHCR அட்டை இருந்தாலும் சட்டத்திற்கு அப்பாற்பட்டவர்கள் அல்லர்: குடிவரவுத் துறை எச்சரிக்கை
June 19, 2026, 4:40 pm
போதை வலையில் சிக்கிய ஆசிரியர்: கஞ்சா விநியோகச் சந்தேகத்தில் நால்வர் கைது
June 19, 2026, 3:43 pm
குடும்ப நம்பிக்கையைச் சீரழித்த கொடூரம்: முதியவருக்கு 33 ஆண்டுகள் சிறைவாசம்
June 19, 2026, 3:25 pm
