செய்திகள் மலேசியா
போதை வலையில் சிக்கிய ஆசிரியர்: கஞ்சா விநியோகச் சந்தேகத்தில் நால்வர் கைது
பெசுட்:
கஞ்சா விநியோகக் கும்பலுடன் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் நால்வர் மீது போலிஸார் மேற்கொண்ட அதிரடி நடவடிக்கையில், ஆசிரியர் ஒருவரும் சிக்கியுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நேற்று அதிகாலை 1.30 மணியளவில் கம்போங் ராஜாவில் உள்ள ஒரு வீட்டில் மேற்கொள்ளப்பட்ட போலிஸ் சோதனையின் போது, 25 முதல் 36 வயதுக்குட்பட்ட நால்வர் கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்டவர்களில் அரசு பள்ளி ஆசிரியராக பணியாற்றி வரும் ஒருவரும் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பெசுட் மாவட்ட காவல்துறைத் தலைவர் சூப்பிரிண்டெண்டன் முஹம்மத் ரோசைமே அப்துல் ரஹீம், அப்பகுதியில் போதைப்பொருள் விநியோகம் நடைபெறுவதாக கிடைத்த இரகசியத் தகவலின் அடிப்படையில் இந்த சோதனை மேற்கொள்ளப்பட்டதாக தெரிவித்தார்.
சோதனையின்போது, சுமார் 21.70 கிராம் எடையுடைய கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டதுடன், அதன் மதிப்பு 1,085 ரிங்கிட் என மதிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், சந்தேக நபர்களிடம் நடத்தப்பட்ட சிறுநீர் பரிசோதனையில், நால்வரில் மூவருக்கு THC (டெட்ராஹைட்ரோகன்னாபினோல்) போதைப்பொருள் பயன்பாட்டிற்கான அறிகுறி உறுதி செய்யப்பட்டதாக அவர் கூறினார்.
இந்த வழக்கு, ஆபத்தான போதைப்பொருள் சட்டம் 1952-இன் பிரிவு 39A(1), பிரிவு 15(1)(a) ஆகியவற்றின் கீழ் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
போதைப்பொருள் விநியோகச் செயல்பாடுகளில் ஆசிரியர் ஒருவரின் பெயர் தொடர்புபட்டிருப்பது சமூகத்தில் அதிர்ச்சியையும் கவலையையும் ஏற்படுத்தியுள்ளது.
-சங்கீர்த்தனா
தொடர்புடைய செய்திகள்
June 19, 2026, 6:00 pm
நீதித்துறையின் உயிர்நாடி மக்களின் நம்பிக்கை: தலைமை நீதிபதியின் ஆழமான எச்சரிக்கை
June 19, 2026, 5:28 pm
UNHCR அட்டை இருந்தாலும் சட்டத்திற்கு அப்பாற்பட்டவர்கள் அல்லர்: குடிவரவுத் துறை எச்சரிக்கை
June 19, 2026, 3:43 pm
குடும்ப நம்பிக்கையைச் சீரழித்த கொடூரம்: முதியவருக்கு 33 ஆண்டுகள் சிறைவாசம்
June 19, 2026, 3:25 pm
