செய்திகள் மலேசியா
குடும்ப நம்பிக்கையைச் சீரழித்த கொடூரம்: முதியவருக்கு 33 ஆண்டுகள் சிறைவாசம்
மூவார்:
இரு சிறுமிகளான தனது பேத்திகளுக்குப் பாலியல் துஷ்பிரயோகம், பாலியல் வன்கொடுமை செய்த குற்றத்தை ஒப்புக்கொண்ட 67 வயது முதியவருக்கு, மூவார் செஷன்ஸ் நீதிமன்றம் 33 ஆண்டுகள் சிறைத்தண்டனையும் 14 பிரம்படிகளும் விதித்து தீர்ப்பளித்தது.
நீதிபதி முஹம்மத் கைரி ஹாரோன் முன்னிலையில் விசாரிக்கப்பட்ட இந்த வழக்கில், குற்றஞ்சாட்டப்பட்டவர் ஐந்து குற்றச்சாட்டுகளை எதிர்கொண்டார். அவற்றில், 12 வயது, 9 வயதுடைய தனது இரண்டு பேத்திகளுக்கு எதிராக பாலியல் குற்றங்களை மேற்கொண்டதாக குற்றம் சுமத்தப்பட்டது.
விசாரணையின் போது, 12 வயது சிறுமி மீது பலமுறை பாலியல் வன்கொடுமை, பாலியல் துஷ்பிரயோகம் செய்ததுடன், மற்றொரு 9 வயது பேத்தியிடமும் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டது நீதிமன்றத்தில் உறுதிப்படுத்தப்பட்டது.
குற்றத்தின் தீவிரத்தைக் கருத்தில் கொண்டு, சிறைத்தண்டனை, பிரம்படிக்கு மேலாக, குற்றவாளி சிறையில் இருக்கும் காலம் முழுவதும் ஆலோசனை அமர்வுகளில் பங்கேற்க வேண்டும் என்றும், தண்டனை நிறைவடைந்த பின்னர் மூன்று ஆண்டுகள் காவல்துறை கண்காணிப்பின் கீழ் இருக்க வேண்டும் என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டது.
-சங்கீர்த்தனா
தொடர்புடைய செய்திகள்
June 19, 2026, 6:00 pm
நீதித்துறையின் உயிர்நாடி மக்களின் நம்பிக்கை: தலைமை நீதிபதியின் ஆழமான எச்சரிக்கை
June 19, 2026, 5:28 pm
UNHCR அட்டை இருந்தாலும் சட்டத்திற்கு அப்பாற்பட்டவர்கள் அல்லர்: குடிவரவுத் துறை எச்சரிக்கை
June 19, 2026, 4:40 pm
போதை வலையில் சிக்கிய ஆசிரியர்: கஞ்சா விநியோகச் சந்தேகத்தில் நால்வர் கைது
June 19, 2026, 3:25 pm
