நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

பொது தற்காப்புப் படையில் 39 ஆண்டுகள் சேவை: கேப்டன் பாலசுப்பிரமணியத்திற்கு அரசாங்க நற்சான்றிதழ் வழங்கப்பட்டது

ஈப்போ:

கடந்த 39 ஆண்டுகளாக நீர்ப்பாசனத் துறையில் அர்ப்பணிப்புடன் பணியாற்றி, அதே நேரத்தில் பொது தற்காப்புப் படையிலும் தொடர்ந்து சேவையாற்றி வந்த கேப்டன் பாலசுப்பிரமணியம், தனது சிறப்பான சேவைக்காக அரசாங்கத்தின் அங்கீகாரத்தைப் பெற்றுள்ளார்.

1987ஆம் ஆண்டு நீர்ப்பாசனத் துறையில் பணியில் இணைந்த அவர், 2024 மார்ச் 26ஆம் தேதி தனது 40 ஆண்டுகால பணியை நிறைவு செய்து ஓய்வு பெற்றார்.

ஈப்போ மேருவில் உள்ள பிரபல ஹோட்டலில் நடைபெற்ற இந்த கௌரவிப்பு நிகழ்வில் கலந்துக்கொண்ட நீர்பாசன துறை இலாகா உயர் நிலை அதிகாரிகள் அவருக்கு நன்றிதழை எடுத்து வழங்கினர்.

மேலும், 1986 ஆம் ஆண்டு முதல் பொது தற்காப்புப் படையில் இணைந்து தொடர்ந்து சேவையாற்றி வருகிறார்.

இந்த இரு துறைகளிலும் அவர் ஆற்றிய அர்ப்பணிப்பான பணிக்காக சிறப்பான சேவையாளர் என்ற அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

இந்த விருது தனக்கு கிடைத்தது மிகுந்த பெருமையையும் மகிழ்ச்சியையும் அளிப்பதாகக் கூறிய பாலசுப்பிரமணியம், இது தனது தனிப்பட்ட சாதனை மட்டுமல்லாமல், தன்னுடன் இணைந்து பணியாற்றிய அனைவரின் ஒத்துழைப்பிற்கும் கிடைத்த அங்கீகாரம் என்றும் தெரிவித்தார்.

மேலும், இளைஞர்கள் அரசாங்கத் துறைகள் மற்றும் பொது தற்காப்புப் படை போன்ற சேவை அமைப்புகளில் இணைந்து நாட்டிற்கும் சமூகத்திற்கும் சேவையாற்ற வேண்டும் என அவர் கேட்டுக் கொண்டார்.

தற்போதைய தலைமுறையினருக்கு கல்வி மற்றும் திறமைக்கேற்ப நல்ல பொறுப்புகள் வழங்கப்படுகின்றன என்றும், அந்த வாய்ப்புகளைப் பயன்படுத்தி பொதுச் சேவையில் ஈடுபட வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
தனது நீண்டகால பணிப்பயணத்தில் வழிகாட்டிய மற்றும் ஆதரவளித்த அனைவருக்கும் அவர் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்தார்.

குறிப்பாக, பொது தற்காப்புப் படையில் தன்னை இணைத்த சார்ஜன் ஏகாம்பரம் அவர்களுக்கும், நீர்ப்பாசனத் துறையில் தன்னை அறிமுகப்படுத்தி வழிகாட்டிய முன்னோடிகளுக்கும் அவர் தனது நன்றியை உரித்தாக்கினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset