செய்திகள் மலேசியா
UNHCR அட்டை இருந்தாலும் சட்டத்திற்கு அப்பாற்பட்டவர்கள் அல்லர்: குடிவரவுத் துறை எச்சரிக்கை
போர்ட் டிக்சன்:
ஐ.நா. அகதிகள் உயர் ஆணையத்தின் (UNHCR) அட்டையை வைத்திருப்பது, மலேசியச் சட்டங்களிலிருந்து விலக்கு பெறுவதற்கான உரிமை அல்ல என்று குடிவரவுத் துறை (JIM) திட்டவட்டமாக அறிவித்துள்ளது.
குடிவரவுத் துறையின் தலைமை இயக்குநர் டத்தோ ஜக்காரியா ஷாபான், UNHCR அட்டைதாரர்கள் குடிவரவு ஆவணங்கள் இல்லாத குற்றச்சாட்டில் தடுத்து வைக்கப்படாமல் இருக்கலாம். எனினும், குற்றச் செயல்களில் ஈடுபட்டால் அல்லது நாட்டின் பிற சட்டங்களை மீறினால், அவர்களுக்கு எதிராக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சட்ட நடவடிக்கை எடுக்க முடியும் என்று தெரிவித்துள்ளார்.
மேலும், மலேசியாவில் தங்கியுள்ள அனைத்து அகதிகளையும் முழுமையாகப் பதிவு செய்யும் நடவடிக்கையை உள்துறை அமைச்சு முன்னெடுத்து வருவதாகவும், அகதிகளின் உண்மையான எண்ணிக்கையைத் துல்லியமாக அறிய UNHCR தரவுகளை மட்டும் நம்ப விரும்பவில்லை என்றும் அவர் தெரிவித்தார்.
UNHCR தரவுகளின்படி, மலேசியாவில் 140-க்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த 2 லட்சத்திற்கும் அதிகமான அகதிகள் பதிவுசெய்யப்பட்டுள்ளனர். இவர்களில் பெரும்பாலானோர் மியான்மரைச் சேர்ந்த ரோஹிங்கியா அகதிகள் எனக் கூறப்படுகிறது.
இதற்கிடையில், ஜூன் 15 வரை நாடு முழுவதும் மேற்கொள்ளப்பட்ட 5,430 அமலாக்க நடவடிக்கைகளில் 33,145 வெளிநாட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக ஜக்காரியா தெரிவித்தார். சமூக வருகைப் பாஸ்களைத் தவறாகப் பயன்படுத்தி வேலை செய்தல், வணிகம் நடத்துதல் உள்ளிட்ட பல்வேறு குடிவரவு குற்றங்களே இதற்குக் காரணமாகும்.
அதேவேளை, சட்டபூர்வ அனுமதி இல்லாத வெளிநாட்டு தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்தியதற்காக 868 முதலாளிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார். இதில் சுமார் 95 சதவீதம் பேர் உள்ளூர் முதலாளிகள் என்பது குறிப்பிடத்தக்கது.
“சட்டவிரோதமாக வெளிநாட்டவர்களைப் பணியமர்த்தும் முதலாளிகளுக்கு எந்தவித சலுகையும் வழங்கப்படாது. நாட்டின் சட்டம் அனைவருக்கும் சமமானது,” என ஜக்காரியா கடுமையாக எச்சரித்தார்.
ஜூன் 14 நிலவரப்படி, நாடு முழுவதும் உள்ள குடிவரவு தடுப்பு முகாம்களில் 22,151 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
-சங்கீர்த்தனா
தொடர்புடைய செய்திகள்
June 19, 2026, 6:00 pm
நீதித்துறையின் உயிர்நாடி மக்களின் நம்பிக்கை: தலைமை நீதிபதியின் ஆழமான எச்சரிக்கை
June 19, 2026, 4:40 pm
போதை வலையில் சிக்கிய ஆசிரியர்: கஞ்சா விநியோகச் சந்தேகத்தில் நால்வர் கைது
June 19, 2026, 3:43 pm
குடும்ப நம்பிக்கையைச் சீரழித்த கொடூரம்: முதியவருக்கு 33 ஆண்டுகள் சிறைவாசம்
June 19, 2026, 3:25 pm
