செய்திகள் மலேசியா
16ஆவது பொதுத் தேர்தலில் சிலாங்கூரில் போட்டியிட தெங்கு ஸப்ருல் முன்மொழிவு
கோலாலம்பூர்:
பிரதமரின் மூத்த அரசியல் ஆலோசகரான தெங்கு ஸப்ருல் அஜீஸ், 16ஆவது பொதுத் தேர்தலில் சிலாங்கூரில் போட்டியிடுவதற்கான ஒரு முன்மொழிவைச் சமர்ப்பித்துள்ளார்.
கெஅடிலான் தலைவர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிமின் ஒப்புதலைப் பெறுவதற்காக இந்த முன்மொழிவு அதன் தலைமைக்குச் சமர்ப்பிக்கப்பட்டதாக அவர் கூறினார்.
ஒருவேளை தேர்தல், குறிப்பாக பொதுத் தேர்தல் நடந்தால், சிலாங்கூரில் போட்டியிட எனக்கு வாய்ப்பு வழங்கப்படும் என்பதற்காக இந்த முன்மொழிவைச் சமர்ப்பித்துள்ளேன்.
ஆனால் இன்னும் இறுதி முடிவு எடுக்கப்படவில்லை என்று அவர் கூறினார்.
அம்பாங் கிளை கெஅடிலான் உறுப்பினர், தனிப்பட்ட முறையில் தனக்கு எந்தவொரு இலக்குத் தொகுதியும் இல்லை.
ஆனால் எந்தவொரு நாடாளுமன்றத் தொகுதியில் காலியிடம் உள்ளதோ அங்கு போட்டியிடுவதற்கான நம்பிக்கையைத் தலைமை தனக்கு அளிக்கும் என்று நம்புவதாகவும் அவர் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
June 19, 2026, 6:00 pm
நீதித்துறையின் உயிர்நாடி மக்களின் நம்பிக்கை: தலைமை நீதிபதியின் ஆழமான எச்சரிக்கை
June 19, 2026, 5:28 pm
UNHCR அட்டை இருந்தாலும் சட்டத்திற்கு அப்பாற்பட்டவர்கள் அல்லர்: குடிவரவுத் துறை எச்சரிக்கை
June 19, 2026, 4:40 pm
போதை வலையில் சிக்கிய ஆசிரியர்: கஞ்சா விநியோகச் சந்தேகத்தில் நால்வர் கைது
June 19, 2026, 3:43 pm
