செய்திகள் மலேசியா
ஹம்ஸாவை மீண்டும் எதிர்க்கட்சித் தலைவராக நியமித்ததை தெரிவித்து சபாநாயகருக்கு தக்கியூடின் கடிதம் அனுப்பியுள்ளார்
கோலாலம்பூர்:
ஹம்ஸாவை மீண்டும் எதிர்க்கட்சித் தலைவராக நியமித்ததை தெரிவித்து
சபாநாயகருக்கு தேசியக் கூட்டணியின் தலைமைக் கொறடாவான தக்கியூடின் ஹசன் கடிதம் அனுப்பியுள்ளார்
டத்தோஸ்ரீ ஹம்ஸா ஜைனுடினை புதிய எதிர்க்கட்சித் தலைவராக நியமிக்க 61 எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஒப்புக்கொண்டுள்ளனர்.
இதன் அடிப்படையில் மக்களவை சபாநாயகர் டான்ஸ்ரீ ஜொஹரி அப்துலுக்கு கடிதம் மூலம் இதனை அவர் தெரிவித்துள்ளார்.
கெமாமான் நாடாளுமன்ற உறுப்பினர் அஹ்மத் சம்சுரி மொக்தார் எதிர்க்கட்சித் தலைவர் பதவியை ராஜினாமா செய்ததைத் தொடர்ந்து இந்த முடிவு எடுக்கப்பட்டது.
கடந்த ஜூன் 10 அன்று இந்த விஷயம் ஜொஹாரிக்குத் தெரிவிக்கப்பட்டதாக தக்கியூடின் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
June 19, 2026, 6:00 pm
நீதித்துறையின் உயிர்நாடி மக்களின் நம்பிக்கை: தலைமை நீதிபதியின் ஆழமான எச்சரிக்கை
June 19, 2026, 5:28 pm
UNHCR அட்டை இருந்தாலும் சட்டத்திற்கு அப்பாற்பட்டவர்கள் அல்லர்: குடிவரவுத் துறை எச்சரிக்கை
June 19, 2026, 4:40 pm
போதை வலையில் சிக்கிய ஆசிரியர்: கஞ்சா விநியோகச் சந்தேகத்தில் நால்வர் கைது
June 19, 2026, 3:43 pm
குடும்ப நம்பிக்கையைச் சீரழித்த கொடூரம்: முதியவருக்கு 33 ஆண்டுகள் சிறைவாசம்
June 19, 2026, 3:25 pm
