செய்திகள் மலேசியா
சன்சூரியா குடியிருப்பில் இந்தோனேசியப் பெண் கொலை: 44 வயது பெண்ணுக்கு நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு
செப்பாங்:
இம்மாத தொடக்கத்தில் பண்டார் சன்சூர்யா அடுக்குமாடி குடியிருப்பில் இந்தோனேசிய பெண் ஒருவரைக் கொலை செய்த குற்றத்திற்காக பெண் ஒருவர் இன்று மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டுள்ளார்.
கடந்த 3 ஆம் தேதி ஜூன் மாதம் மதியம் 2.31 மணியளவில், தி ஒலிவ் (The Olive) குடியிருப்பில் உள்ள ஒரு வீட்டில் புத்திரி எனும் இந்தோனேசிய பெண்ணைக் கொலை செய்த வழக்கில் 44 வயதான சின் சியாவ் லான் குற்றம் சாட்டப்பட்டுள்ளார்.
குற்றஞ்சாட்டப்பட்டவர், குற்றவியல் சட்டத்தின் 302ஆவது பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளார். குற்றம் நிரூபிக்கப்பட்டால் சுயதொழில் செய்யும் சியாவ் லானுக்கு மரணதண்டனை அல்லது 30 முதல் 40 ஆண்டுகள் சிறை தண்டனையும் 12 முறை பிரம்படியும் விதிக்கப்படலாம்.
நீதிமன்றத்தில் தன் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகள் வாசிக்கப்பட்டபோது புரிந்து கொண்டதாக ஒப்புக்கொண்ட குற்றவாளி எந்த ஒப்புதல் வாக்குமூலத்தையும் பதிவிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இதற்கிடையில் அரசு தரப்பு வழக்கறிஞரான பி.லுவித்தா, ஆவணங்களைச் சமர்பிக்கும் தேதியை நீதிமன்றத்தில் கோரியுள்ளார்.
நீதிபதி மாஜிஸ்திரேட் கைராத்துல் அனிமா ஜெலானி ஜூலை 21 தேதியை வழக்கின் அடுத்த விசாரணைக்காக நிர்ணயத்துள்ளார்.
குற்றம் சாட்டப்பட்டவருக்கு வழக்கறிஞர் வி.அய்யாசாமி ஆஜரானார்.
-சங்கீர்த்தனா
தொடர்புடைய செய்திகள்
June 19, 2026, 6:00 pm
நீதித்துறையின் உயிர்நாடி மக்களின் நம்பிக்கை: தலைமை நீதிபதியின் ஆழமான எச்சரிக்கை
June 19, 2026, 5:28 pm
UNHCR அட்டை இருந்தாலும் சட்டத்திற்கு அப்பாற்பட்டவர்கள் அல்லர்: குடிவரவுத் துறை எச்சரிக்கை
June 19, 2026, 4:40 pm
போதை வலையில் சிக்கிய ஆசிரியர்: கஞ்சா விநியோகச் சந்தேகத்தில் நால்வர் கைது
June 19, 2026, 3:43 pm
குடும்ப நம்பிக்கையைச் சீரழித்த கொடூரம்: முதியவருக்கு 33 ஆண்டுகள் சிறைவாசம்
June 19, 2026, 3:25 pm
