செய்திகள் மலேசியா
பெர்லிஸில் அதிகரிக்கும் ரோஹிங்கியா மக்கள் தொகை உள்ளூர் மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
அராவ்:
பெர்லிஸ் மாநிலத்தின் பல பகுதிகளில் ரோஹிங்கியா இன அகதிகளின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவது, உள்ளூர் மக்களிடையே புதிய கவலைகளையும் அச்ச உணர்வையும் ஏற்படுத்தியுள்ளது.
தம்புன் துலாங், சிம்பாங் எம்பாட் உள்ளிட்ட பல பகுதிகளில் ரோஹிங்கியா அகதிகள் சிதறிய வகையில் குடியேறியிருப்பதாகக் கண்டறியப்பட்டுள்ளது. இவர்களில் பெரும்பாலானோர் விவசாயம், கட்டுமானத் துறைகளில் கூலித் தொழிலாளர்களாக பணியாற்றி வருகின்றனர்.
உள்ளூர் குடியிருப்பாளர்கள், நாளுக்கு நாள் அதிகரித்து வரும் அவர்களின் எண்ணிக்கை சமூக, மக்கள் தொகை அமைப்பில் மாற்றங்களை ஏற்படுத்தக்கூடும் என அச்சம் வெளியிட்டுள்ளனர். குறிப்பாக, சமீபத்திய ஹரி ராயா ஹஜி கொண்டாட்டத்தின் போது நூற்றுக்கணக்கான ரோஹிங்கியாக்கள் ஒன்று கூடியிருந்த காட்சி, பலரிடையே கவலையை அதிகரித்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து கருத்து தெரிவித்த தம்புன் துலாங் மாநில சட்டமன்ற உறுப்பினர் வான் ஸிக்ரி அஃப்தார் இஷாக், பெர்லிஸில் ரோஹிங்கியா அகதிகளின் நிலைமை தற்போது கட்டுப்பாட்டில் இருந்தாலும், இவ்விவகாரத்தை அலட்சியமாகக் கருத முடியாது என வலியுறுத்தினார்.
அகதிகளின் வருகை, குடியேற்ற நிலவரம் தொடர்பாக துல்லியமான தரவுகள் அவசியம் என்றும், அதற்காக ஐக்கிய நாடுகள் அகதிகள் உயர்ஸ்தானிகர் அலுவலகம் (UNHCR), சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கண்காணிப்பை மேலும் வலுப்படுத்த வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.
இதற்கிடையில், 2012ஆம் ஆண்டு முதல் மலேசியாவில் வசித்து வரும் ரோஹிங்கியா அகதியான முஹம்மத் சாதேக் ரஷித் அஹம்மத், மலேசிய மக்களும் அரசாங்கமும் வழங்கிய வாழ்வாதார வாய்ப்புகளுக்கு நன்றி தெரிவித்தார். மூன்றாவது நாட்டிற்கு இடமாற்றம் செய்யும் வாய்ப்பு கிடைத்தால் அதற்குத் தயாராக இருப்பதாகவும் அவர் கூறினார்.
பெர்லிஸில் ரோஹிங்கியா அகதிகளின் எண்ணிக்கை உயர்ந்து வரும் நிலையில், மனிதாபிமான பொறுப்புகளுக்கும் தேசிய நலன்களுக்கும் இடையில் சமநிலையைப் பேண வேண்டிய அவசியம் குறித்து விவாதங்கள் மீண்டும் தீவிரமடைந்துள்ளன.
-சங்கீர்த்தனா
தொடர்புடைய செய்திகள்
June 19, 2026, 6:00 pm
நீதித்துறையின் உயிர்நாடி மக்களின் நம்பிக்கை: தலைமை நீதிபதியின் ஆழமான எச்சரிக்கை
June 19, 2026, 5:28 pm
UNHCR அட்டை இருந்தாலும் சட்டத்திற்கு அப்பாற்பட்டவர்கள் அல்லர்: குடிவரவுத் துறை எச்சரிக்கை
June 19, 2026, 4:40 pm
போதை வலையில் சிக்கிய ஆசிரியர்: கஞ்சா விநியோகச் சந்தேகத்தில் நால்வர் கைது
June 19, 2026, 3:43 pm
குடும்ப நம்பிக்கையைச் சீரழித்த கொடூரம்: முதியவருக்கு 33 ஆண்டுகள் சிறைவாசம்
June 19, 2026, 3:25 pm
