நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

பதின்வயது சிறுமி தடியால் தாக்கப்பட்ட பின்னர் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டார்; அவரிடமிருந்த பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்டன: போலிஸ்

தும்பாட்:

பதின்வயது சிறுமி தடியால் தாக்கப்பட்ட பின்னர் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டார்.

மேலும் அவரிடமிருந்த பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளன என்று தும்பாட் மாவட்டக் போலிஸ்  தலைவர்,  முகமது கைரி ஷாபி கூறினார்.

பாலெக்பாங்கில் நடந்த இச்சம்பவத்தில் பாதிக்கப்பட்ட சிறுமி புதரில் இருந்து கண்டெடுக்கப்பட்டார்.

முகம், தலை, உடலில் காயங்களுடன், 15 வயதான அந்தச் சிறுமி அரை மயக்க நிலையில் கண்டெடுக்கப்பட்டார்.

பாதிக்கப்பட்ட சிறுமியின் 50 வயது தந்தை, தனது மகள் நடைப்பயிற்சிக்குச் சென்ற பிறகு வீடு திரும்பவில்லை என்று போலிஸ்க்கு தகவல் அளித்தார்.

நேற்று காலை 10 மணி முதல் பாதிக்கப்பட்ட சிறுமியின் தந்தை தனது மகளைத் தேடிக் கொண்டிருந்தபோது, ​​இங்குள்ள பலேக்பாங், கம்போங் மெசிராவில் உள்ள ஒரு தண்ணீர் குழாய்க்கு அருகில் உள்ள புதர் நிறைந்த பகுதியில் அவரது மகள் கண்டுபிடிக்கப்பட்டதாக ஒரு நண்பர் அவரைத் தொடர்புகொண்டு தெரிவித்துள்ளார்.

அந்த நபர் சம்பவ இடத்திற்குச் சென்றபோது, ​​தனது மகள் அரை மயக்க நிலையில், முகம், தலை, உடலில் காயங்களுடன் இருப்பதைக் கண்டார்.

மேலும் அவர் தடியால் தாக்கப்பட்டிருக்கலாம் என நம்பப்படுகிறது.

சம்பவ இடத்தில் பாதிக்கப்பட்ட பெண் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டதுடன், அவரது கைபேசியையும் சந்தேக நபர் திருடிச் சென்றுள்ளார் என்று அவர்  தெரிவித்தார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset