செய்திகள் மலேசியா
பிரதமர் இரண்டு நாள் அதிகாரப்பூர்வ பயணமாக துர்க்மெனிஸ்தான் சென்றடைந்தார்
அஷ்காபாத்:
பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் இரண்டு நாள் அதிகாரப்பூர்வ பயணமாக துர்க்மெனிஸ்தான் சென்றடைந்தார்.
கசான் நகருக்கா அ தனது இரண்டு நாள் பணிப் பயணத்தை நிறைவுசெய்த பிரதமர்,
மத்திய ஆசிய நாடான துர்க்மெனிஸ்தானின் தலைநகரான, இங்கு 'வெள்ளை பளிங்கு நகரம்' என அழைக்கப்படும் இடத்திற்கு இன்று வந்தடைந்தார்.
நிதி அமைச்சராகவும் இருக்கும் டத்தோஸ்ரீ அன்வாருடன், முதலீடு, வர்த்தகம், தொழில்துறை அமைச்சர் டத்தோஸ்ரீ ஜொஹரி அப்துல் கனி, பொருளாதார அமைச்சர் அக்மல் நஸ்ருல்லா முகமது நசீர், அத்துடன் பிரதமர் அலுவலகம், வெளியுறவு அமைச்சின் அதிகாரிகளும் உடன் வந்திருந்தனர்.
பிரதமர் வந்தடைந்ததும், துர்க்மெனிஸ்தானுக்கான மலேசியத் தூதர் முகமது சுஹைமி அஹ்மத் தாஜுதீன், துர்க்மெனிஸ்தானின் எண்ணெய், எரிவாயு அமைச்சரவையின் துணைத் தலைவர் குவாஞ்ச் அகஜனோவ் ஆகியோர் பிரதமரை வரவேற்றனர்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
June 19, 2026, 6:00 pm
நீதித்துறையின் உயிர்நாடி மக்களின் நம்பிக்கை: தலைமை நீதிபதியின் ஆழமான எச்சரிக்கை
June 19, 2026, 5:28 pm
UNHCR அட்டை இருந்தாலும் சட்டத்திற்கு அப்பாற்பட்டவர்கள் அல்லர்: குடிவரவுத் துறை எச்சரிக்கை
June 19, 2026, 4:40 pm
போதை வலையில் சிக்கிய ஆசிரியர்: கஞ்சா விநியோகச் சந்தேகத்தில் நால்வர் கைது
June 19, 2026, 3:43 pm
குடும்ப நம்பிக்கையைச் சீரழித்த கொடூரம்: முதியவருக்கு 33 ஆண்டுகள் சிறைவாசம்
June 19, 2026, 3:25 pm
