நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

ஜொகூரில் 4 தொகுதிகளிலும் நெகிரி செம்பிலானில் 3 தொகுதிகளிலும் எம்ஐபிபி கட்சி போட்டி

சிரம்பான்:

வரவிருக்கும் மாநிலத் தேர்தலில் ஜொகூரில் நான்கு இடங்களிலும், நெகிரி செம்பிலானில் மூன்று இடங்களிலும் எம்ஐபிபி கட்சி போட்டியிட திட்டமிட்டுள்ளது.

மலேசிய இந்திய மக்கள் கட்சியின் (எம்ஐபிபி) பொதுச் செயலாளர் சதீஸ்குமார் கூறினார்.

சட்டமன்றங்கள் கலைக்கப்பட்டதை தொடர்ந்து ஜொகூர், நெகிரி செம்பிலானில் மாநில தேர்தல்கள் விரைவில் நடைபெறவுள்ளன.

இவ்விரு தேர்தல்களையும் எதிர்கொள்ள தலைவர் புனிதன் தலைமையிலான எம்ஐபிபி கட்சி தயார் நிலையில் உள்ளது.

ஜொகூரில் 4 தொகுதிகளிலும் நெகிரி செம்பிலானில் 3 தொகுதிகளிலும் எம்ஐபிபி கட்சி போட்டியிட தயாராக உள்ளது.

இதற்கான தொகுதிகளையும் எம்ஐபிபி கட்சி அடையாளம் கண்டுள்ளது.

ஜொகூர், நெகிரி செம்பிலான், மலாக்காவில் உள்ள கட்சி தேர்தல் கேந்திரமும் முழுமையாக செயல்பட்டு வருகிறது.

அடிமட்ட அளவில் மக்களைச் சென்றடைவதற்காக தற்போது பல்வேறு திட்டங்களைத் தீவிரமாகச் செயல்படுத்தி வருகிறது.

அரசியல் நிலைத்தன்மை, மக்கள் ஒற்றுமை, தேசியப் பொருளாதார வளர்ச்சி ஆகியவை அனைத்துக் கட்சிகளின் முன்னுரிமையாகவும் எப்போதும் இருக்க வேண்டும் என்று எம்ஐபிபி நம்புவதாகச் சதீஸ் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset