நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

சுங்கை சிப்புட் கம்போங் பெங்காலி நிலப் பிரச்சினைக்கு தீர்வுக்கான உரிய நடவடிக்கை எடுக்கப்படும்: டத்தோ சிவநேசன்

ஈப்போ:

அரசாங்க நிலத்தில் வசித்து வரும் இந்தியக் குடும்பங்களின் நிலப் பிரச்சனைகளுக்கு பேரா மாநில அரசு தீரவுக் கண்டுள்ளது.

அந்த வகையில் சுமார் நூறாண்டு காலமாக வசித்து வரும் சுங்கை சிப்புட்டில் உள்ள கம்போங் பெங்காலி நில விவகாரங்களுக்கு விரைவில் தீர்வுக்கான உரிய நடவடிக்கை எடுப்படும்


பேரா மாநில ஆட்சிக் குழு உறுப்பினரும் இந்திய விவகாரங்களுக்கான தலைவருமான டத்தோ அ. சிவநேசன் இதனை கூறினார்.

இந்த விவகாரம் பல ஆண்டு காலமாக இருந்து வருகிறது

இந்த கிராமத்தில் தற்பொழுது வசித்து வரும் 27 குடும்பங்களின் நிலப் பிரச்சனைகளுக்கு தீர்வுக்கான ஒரு அரசியல் கட்சி பல ஆண்டுகள் நடவடிக்கை எடுத்தும் பயன் கிடைக்கவில்லை.

தற்போது அதனை நேரடியாக தம்மிடைய கவனத்திற்கு கொண்டு வரப்படடுள்ளது.

அந்த குடிப்பாளர்கள் சாரபில் அதன் பிரதிநிதிகள் ஈப்போவில் உள்ள இந்திரா மூலியா அரங்கில் மாநில மந்திரி பெசார் தலைமையில் நடைபெற்ற மக்கள் சந்திப்பு நிகழ்வில் என்னை சந்தித்து பிரச்சனையை முன் வைத்துள்ளனர்.

இதற்கு முன்பு சுங்கை சிப்புட்டில் உள்ள மக்கள் எதிர்நோக்கிய நிலப் பிரச்சனைகளுக்கு தீர்வுக் கானப்பட்டுள்ளதையும் சிவநேசன் நினைவுக் கூர்ந்தார்.

இந்த சந்திப்பில் முன்னாள் ஊராட்சி மன்ற உறுப்பினர் கே. மணிமாறன் கலந்து கொண்டார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset