செய்திகள் மலேசியா
குப்பைத் தொட்டியில் இருந்து பழங்களைச் சேகரித்து குறைந்த விலைக்கு மறுவிற்பனை செய்வதாக ரோஹிங்கியர்கள் மீது குற்றச்சாட்டு
கோலாலம்பூர்:
குப்பைத் தொட்டிகளில் இருந்து பழங்களைச் சேகரித்து, அவற்றை சுத்தம் செய்து குறைந்த விலைக்கு மறுவிற்பனை செய்வதாக ரோஹிங்கியா இனத்தைச் சேர்ந்த சில ஆண்கள் மீது சமூக ஊடகங்களில் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.
சமூக ஊடகங்களில் பரவியுள்ள ஒரு காணொலியில், சில ஆண்கள் குப்பைத் தொட்டியில் இருந்து பழங்களை எடுத்து கூடைகளில் சேகரிப்பது பதிவாகியுள்ளது.
இந்தப் பழங்கள் பின்னர் சுத்தம் செய்யப்பட்டு சந்தையில் குறைந்த விலைக்கு விற்பனை செய்யப்படுவதாக பதிவிட்டவர் கூறியுள்ளார்.
இதுகுறித்து கருத்து தெரிவித்த சில சமூக ஊடக பயனர்கள், இத்தகைய நடவடிக்கைகள் நீண்டகாலமாக நடைபெற்று வருவதாகக் கூறினர். மேலும், சிலர் தோட்டங்களில் இருந்து பழங்கள் திருடப்பட்ட சம்பவங்களையும் குறிப்பிட்டனர்.
இதற்கிடையில், குப்பையில் இருந்து எடுக்கப்படும் அல்லது நிராகரிக்கப்பட்ட பழங்கள் மாசுபட்டிருக்கக்கூடும் என்பதால் அவற்றை உண்பது உடல்நலத்திற்கு ஆபத்தானதாக இருக்கலாம் என சிலர் எச்சரித்துள்ளனர்.
-சங்கீர்த்தனா
தொடர்புடைய செய்திகள்
June 15, 2026, 5:01 pm
ஜூலை 1 முதல் அனைத்து ஏடிஎம்களிலும் பணம் எடுப்பதற்கு 1 ரிங்கிட் கட்டணம் இல்லை
June 15, 2026, 4:30 pm
புக்கிட் ஜாலிலில் ஆடம்பர குடியிருப்பில் இயங்கிய மினி காசினோ முறியடிப்பு: 15 பேர் கைது
June 15, 2026, 3:45 pm
