செய்திகள் மலேசியா
தேசியக் கூட்டணிக் கொள்கைகளுடன் ஒத்துப்போகவில்லை என்றால் PAS தனிச்சின்னத்தில் போட்டியிட வேண்டும்: துன் ஃபைசல்
பெட்டாலிங் ஜெயா:
தேசியக் கூட்டணி (PN) கூட்டணியின் முடிவுகள், கொள்கைகளுடன் இணங்க செயல்பட விருப்பமில்லையெனில், PAS தனது சொந்தக் கட்சிச் சின்னத்தில் தேர்தலில் போட்டியிட வேண்டும் என்று பெர்சத்து தகவல் தலைவர் துன் ஃபைசல் இஸ்மாயில் அசீஸ் தெரிவித்துள்ளார்.
பிஎன் கூட்டணியை உருவாக்குவதில் பெர்சத்து முக்கியப் பங்கு வகித்துள்ளதாகக் குறிப்பிட்ட அவர், கூட்டணியின் அதிகாரப்பூர்வ முடிவுகளுக்கு முரணாக செயல்படும் எந்தக் கட்சியும் அதன் நம்பகத்தன்மையையும் அடையாளத்தையும் பாதிக்கக்கூடும் என்று குறிப்பிட்டுள்ளார்.
ஜொகூர், நெகிரி செம்பிலான் மாநிலத் தேர்தல்களில் பாஸ் தொடர்ந்து பிஎன் சின்னத்தைப் பயன்படுத்துவது குறித்து கூட்டணிக்குள் கருத்து வேறுபாடுகள் எழுந்துள்ள நிலையில், இந்தக் கருத்து வெளியாகியுள்ளது.
இதற்கிடையில், PAS பொருளாளர் இஸ்கந்தர் சமாட், பிஎன் கூட்டணியின் அங்கத்துவக் கட்சியாக இருப்பதால், கூட்டணிச் சின்னத்தைப் பயன்படுத்துவதற்கான உரிமை PAS-கட்சிக்கு இருப்பதாகத் தெரிவித்தார்.
அதேவேளை, பிஎன் கூட்டணியின் எதிர்காலம், பெர்சத்துவின் நிலை தொடர்பான விவகாரங்கள் அடுத்த வாரம் நடைபெறவுள்ள கூட்டத்தில் தீர்மானிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
-சங்கீர்த்தனா
தொடர்புடைய செய்திகள்
June 15, 2026, 5:01 pm
ஜூலை 1 முதல் அனைத்து ஏடிஎம்களிலும் பணம் எடுப்பதற்கு 1 ரிங்கிட் கட்டணம் இல்லை
June 15, 2026, 4:30 pm
புக்கிட் ஜாலிலில் ஆடம்பர குடியிருப்பில் இயங்கிய மினி காசினோ முறியடிப்பு: 15 பேர் கைது
June 15, 2026, 3:45 pm
