செய்திகள் மலேசியா
காராக் கோர விபத்து; லோரி ஓட்டுநர் போதைப்பொருள் பயன்படுத்தி இருப்பது சோதனையில் உறுதியானது: போலிஸ்
பெந்தோங்:
கோலாலம்பூர் - காராக் நெடுஞ்சாலையின் 43ஆவது கிலோமீட்டரில் நான்கு பேர் உயிரிழந்த விபத்தில் சம்பந்தப்பட்ட லோரி ஓட்டுநர் போதைப்பொருள் பயன்படுத்தி இருந்தது சோதனையில் உறுதி செய்யப்பட்டுள்ளது.
பெந்தோங் போலிஸ் தலைவர் ஜைஹாம் முகமது கஹார் இதனை கூறினார்.
40 வயதான அந்த நபர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற உடனேயே சிறுநீர் பரிசோதனைக்காக பெந்தோங் மாவட்ட போலிஸ் தலைமையகத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டார்.
பரிசோதனை முடிவுகளில் அந்த நபருக்கு மெத்தம்பெட்டமைன் போதைப்பொருள் பயன்படுத்தி இருந்தது உறுதியானது.
இதையடுத்து.இன்று அதிகாலை சுமார் 4 மணியளவில் அவர் கைது செய்யப்பட்டார் என்று அவர் ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.
முன்னதாக, அந்த லோரி ஓட்டுநர் மீது 15 போக்குவரத்து விதிமீறல் சம்மன்கள் பதிவாகியிருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டது.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
June 15, 2026, 5:01 pm
ஜூலை 1 முதல் அனைத்து ஏடிஎம்களிலும் பணம் எடுப்பதற்கு 1 ரிங்கிட் கட்டணம் இல்லை
June 15, 2026, 4:30 pm
புக்கிட் ஜாலிலில் ஆடம்பர குடியிருப்பில் இயங்கிய மினி காசினோ முறியடிப்பு: 15 பேர் கைது
June 15, 2026, 3:45 pm
ஜொகூர், நெகிரி செம்பிலான் தேர்தல்களுக்கு காவல்துறை தீவிரமான தயாரிப்பில் உள்ளது
June 15, 2026, 3:04 pm
