செய்திகள் மலேசியா
ஜொகூர், நெகிரி செம்பிலான் தேர்தல்களுக்கு காவல்துறை தீவிரமான தயாரிப்பில் உள்ளது
கோலாலம்பூர்:
வரவிருக்கும் ஜொகூர், நெகிரி செம்பிலான் மாநிலத் தேர்தல்களை முன்னிட்டு, பாதுகாப்பு ஏற்பாடுகளை வலுப்படுத்த காவல்துறை கூடுதல் பணியாளர்களைக் களமிறக்கத் தயாராகி வருவதாக காவல்துறைத் தலைவர் (IGP) டான் ஸ்ரீ முஹம்மத் காலிட் இஸ்மாயில் தெரிவித்துள்ளார்.
ஜொகூர் மாநிலத் தேர்தலுக்காக மட்டும் கூடுதலாக 4,000 முதல் 5,000 வரையிலான காவல்துறைப் பணியாளர்கள் தேவைப்படும் என அவர் கூறினார். மாநிலம் முழுவதும் உள்ள வாக்குச்சாவடிகள், வாக்களிப்பு மையங்களின் பாதுகாப்பை உறுதி செய்வதே இந்த நடவடிக்கையின் நோக்கமாகக் கருதப்படுகிறது.
ஜொகூர் தேர்தலைத் தொடர்ந்து நடைபெறவுள்ள நெகிரி செம்பிலான் மாநிலத் தேர்தலுக்கான தயாரிப்புகளும் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அவர் தெரிவித்தார்.
இதனிடையே, ஜொகூர் மாநிலத் தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் ஜூன் 27ஆம் தேதி நடைபெறவுள்ளதுடன், முன்கூட்டிய வாக்களிப்பு ஜூலை 7ஆம் தேதியும், வாக்குப்பதிவு ஜூலை 11ஆம் தேதியும் நடைபெறவுள்ளது.
நெகிரி செம்பிலான் மாநிலத் தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் ஜூலை 18ஆம் தேதி நடைபெறவுள்ள நிலையில், முன்கூட்டிய வாக்களிப்பு ஜூலை 28ஆம் தேதியும், வாக்குப்பதிவு ஆகஸ்ட் 1ஆம் தேதியும் நடைபெறவுள்ளது.
-சங்கீர்த்தனா
தொடர்புடைய செய்திகள்
July 12, 2026, 5:37 pm
ஜொகூர் மாநில மந்திரி புசாராக டத்தோ ஓன் ஹபிஸ் காஸி பதவியேற்றார்
July 12, 2026, 2:25 pm
ங்கா கோர் மிங் தனது ராஜினாமா வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டும்: கைரி
July 12, 2026, 2:24 pm
நஜிப் விடுதலையானால் தான் நான் ராஜினாமா செய்வேன்; தேசிய முன்னணியின் வெற்றியால் அல்ல: ங்கா
July 12, 2026, 1:53 pm
ஜாஹித் ஹமிடி, ஓன் ஹபிஸ் ஆகியோர் சுல்தான் இப்ராஹிமை சந்தித்தனர்
July 12, 2026, 12:12 pm
ஜோகூர் தேர்தல்: 55 வேட்பாளர்கள் வைப்புத்தொகையை இழந்தனர்
July 12, 2026, 10:41 am
