செய்திகள் மலேசியா
புக்கிட் கியாரா ரூமா பஞ்ஜாங் மக்களுக்கு இரண்டு இலவச வீடுகள்; வரலாற்று சாதனை: பிரதமர் பெருமிதம்
கோலாலம்பூர்:
44 ஆண்டுகளாக புக்கிட் கியாரா ரூமா பஞ்ஜாங்கில் வாழ்ந்து வரும் மக்களுக்கு இரண்டு இலவச வீடுகள் கிடைப்பது மிகப் பெரிய வரலாற்று சிறப்புமிக்க சாதனையாகும்.
பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் இதனை தெரிவித்தார்.
புக்கிட் கியாரா ரூமா பஞ்ஜாங் எதிர்நோக்கிய நீண்ட கால பிரச்சனைகளுக்கு இன்று நல்ல முறையில் தீர்வு பிறந்துள்ளது.
ஓவ்வொரு குடும்பத்திற்கும் இரண்டு வீடுகள். இது இங்குள்ள மக்களுக்கு பெரும் மகிழ்ச்சியை அளிக்கும் என்பதில் ஐயமில்லை.
வீடுகள் கட்டுமான திட்டத்திற்கு இன்று அடிக்கல் நாட்டு விழா விமரிசையாக நடைபெற்றது.
வீடுகள் கட்டி முடிக்கப்பட்டதும் அந்த வீடுகளில் மக்கள் குடியேறுவார்கள்.
புக்கிட் கியாரா ரூமா பஞ்ஜாங் மக்களுக்கு இரண்டு இலவச வீடுகள் கிடைக்க பெரும் பாடுபட்ட சிகாம்பூட் நாடாளுமன்ற உறுப்பினரும் கூட்டரசுப் பிரதேச அமைச்சர் ஹன்னா இயோவை பெரிதும் பாராட்டுகிறேன் என்று டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்தார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
July 12, 2026, 5:37 pm
ஜொகூர் மாநில மந்திரி புசாராக டத்தோ ஓன் ஹபிஸ் காஸி பதவியேற்றார்
July 12, 2026, 2:25 pm
ங்கா கோர் மிங் தனது ராஜினாமா வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டும்: கைரி
July 12, 2026, 2:24 pm
நஜிப் விடுதலையானால் தான் நான் ராஜினாமா செய்வேன்; தேசிய முன்னணியின் வெற்றியால் அல்ல: ங்கா
July 12, 2026, 1:53 pm
ஜாஹித் ஹமிடி, ஓன் ஹபிஸ் ஆகியோர் சுல்தான் இப்ராஹிமை சந்தித்தனர்
July 12, 2026, 12:12 pm
ஜோகூர் தேர்தல்: 55 வேட்பாளர்கள் வைப்புத்தொகையை இழந்தனர்
July 12, 2026, 10:41 am
