செய்திகள் மலேசியா
காராக் கோர விபத்து; லோரி ஓட்டுநர் போதைப்பொருள் பயன்படுத்தி இருப்பது சோதனையில் உறுதி செய்யப்பட்டது: போலிஸ்
பெந்தோங்:
கோலாலம்பூர் - காராக் நெடுஞ்சாலையின் 43ஆவது கிலோமீட்டரில் நான்கு பேர் உயிரிழந்த விபத்தில் சம்பந்தப்பட்ட லோரி ஓட்டுநர் போதைப்பொருள் பயன்படுத்தி இருந்தது சோதனையில் உறுதி செய்யப்பட்டுள்ளது.
பெந்தோங் போலிஸ் தலைவர் ஜைஹாம் முகமது கஹார் இதனை கூறினார்.
40 வயதான அந்த நபர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற உடனேயே சிறுநீர் பரிசோதனைக்காக பெந்தோங் மாவட்ட போலிஸ் தலைமையகத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டார்.
பரிசோதனை முடிவுகளில் அந்த நபருக்கு மெத்தம்பெட்டமைன் போதைப்பொருள் பயன்படுத்தி இருந்தது உறுதியானது.
இதையடுத்து.இன்று அதிகாலை சுமார் 4 மணியளவில் அவர் கைது செய்யப்பட்டார் என்று அவர்.ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.
முன்னதாக, அந்த லோரி ஓட்டுநர் மீது 15 போக்குவரத்து விதிமீறல் சம்மன்கள் பதிவாகியிருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டது.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
July 12, 2026, 5:37 pm
ஜொகூர் மாநில மந்திரி புசாராக டத்தோ ஓன் ஹபிஸ் காஸி பதவியேற்றார்
July 12, 2026, 2:25 pm
ங்கா கோர் மிங் தனது ராஜினாமா வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டும்: கைரி
July 12, 2026, 2:24 pm
நஜிப் விடுதலையானால் தான் நான் ராஜினாமா செய்வேன்; தேசிய முன்னணியின் வெற்றியால் அல்ல: ங்கா
July 12, 2026, 1:53 pm
ஜாஹித் ஹமிடி, ஓன் ஹபிஸ் ஆகியோர் சுல்தான் இப்ராஹிமை சந்தித்தனர்
July 12, 2026, 12:12 pm
ஜோகூர் தேர்தல்: 55 வேட்பாளர்கள் வைப்புத்தொகையை இழந்தனர்
July 12, 2026, 10:41 am
