செய்திகள் மலேசியா
புக்கிட் ஜாலிலில் ஆடம்பர குடியிருப்பில் இயங்கிய மினி காசினோ முறியடிப்பு: 15 பேர் கைது
கோலாலம்பூர்:
புக்கிட் ஜாலிலில் உள்ள ஆடம்பர குடியிருப்பு ஒன்றில் இயங்கி வந்த மினி காசினோ, இணைய சூதாட்ட நடவடிக்கைகளைக் காவல்துறையினர் சோதனை நடவடிக்கையின் மூலம் முறியடித்தனர்.
செராஸ் காவல்துறை தலைமையகத்தின் ஒழுக்கக்கேடு, சூதாட்டம், ரகசியச் சங்கங்கள் தடுப்புப் பிரிவு (D7) மேற்கொண்ட சோதனையில், 21 முதல் 44 வயதுக்குட்பட்ட 15 பேர் கைது செய்யப்பட்டதாக செராஸ் துணை காவல்துறைத் தலைவர் சுப்ரிண்டெண்டன் லிம் சுன் ஹோவ் தெரிவித்தார்.
கைது செய்யப்பட்டவர்களில் 12 உள்ளூர் ஆண்கள், இரண்டு உள்ளூர் பெண்கள், ஒரு வியட்நாமியப் பெண் அடங்குவர் என்பது குறிப்பிடப்பட்டுள்ளது.
சோதனையின்போது டெக்சாஸ் ஹோல்டெம் (Texas Hold’em) சூதாட்ட மேசை, நூற்றுக்கணக்கான சூதாட்ட சில்லுகள், விளையாட்டு அட்டைகள், ரொக்கப் பணம், மடிக்கணினிகள், ஒலியமைப்பு சாதனங்கள் உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
மேலும், கோகைன் என சந்தேகிக்கப்படும் சுமார் 10.11 கிராம் வெள்ளைத் தூள் அடங்கிய நான்கு பொதிகளும் கைப்பற்றப்பட்டன.
கைது செய்யப்பட்டவர்களில் ஒருவர், பினாங்கில் நிலுவையில் உள்ள போதைப்பொருள் வழக்கில் தேடப்பட்டு வந்த நபர் என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.
இவ்வழக்கு சூதாட்டம், பொழுதுபோக்கு, ஆபத்தான போதைப்பொருள் தொடர்பான பல்வேறு சட்டங்களின் கீழ் விசாரிக்கப்பட்டு வருகிறது.
-சங்கீர்த்தனா
தொடர்புடைய செய்திகள்
July 12, 2026, 5:37 pm
ஜொகூர் மாநில மந்திரி புசாராக டத்தோ ஓன் ஹபிஸ் காஸி பதவியேற்றார்
July 12, 2026, 2:25 pm
ங்கா கோர் மிங் தனது ராஜினாமா வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டும்: கைரி
July 12, 2026, 2:24 pm
நஜிப் விடுதலையானால் தான் நான் ராஜினாமா செய்வேன்; தேசிய முன்னணியின் வெற்றியால் அல்ல: ங்கா
July 12, 2026, 1:53 pm
ஜாஹித் ஹமிடி, ஓன் ஹபிஸ் ஆகியோர் சுல்தான் இப்ராஹிமை சந்தித்தனர்
July 12, 2026, 12:12 pm
ஜோகூர் தேர்தல்: 55 வேட்பாளர்கள் வைப்புத்தொகையை இழந்தனர்
July 12, 2026, 10:41 am
