செய்திகள் மலேசியா
ஜூலை 1 முதல் அனைத்து ஏடிஎம்களிலும் பணம் எடுப்பதற்கு 1 ரிங்கிட் கட்டணம் இல்லை
கோலாலம்பூர்:
மலேசியாவில் உள்ள அனைத்து வங்கிகளின் வாடிக்கையாளர்களும் ஜூலை 1 முதல் எந்தவொரு ஏடிஎம் இயந்திரம் அல்லது ஸ்மார்ட் மறுசுழற்சி இயந்திரத்திலும் (எஸ்ஆர்எம்) 1 ரிங்கிட் கட்டணமின்றி பணம் எடுக்கலாம்.
மலேசிய வங்கிகள் சங்கம்,, மலேசிய இஸ்லாமிய வங்கி, நிதி நிறுவனங்கள் சங்கம், மலேசிய வளர்ச்சி நிதி நிறுவனங்கள் சங்கம் ஆகியவை இன்று வெளியிட்ட ஒரு கூட்டறிக்கையில் இதனை தெரிவித்துள்ளன.
இந்த முன்முயற்சி மலேசியாவில் உள்ள வாடிக்கையாளர்கள் தங்கள் ஏடிஎம் அட்டையை வழங்கிய வங்கியைப் பொருட்படுத்தாமல், நாடு முழுவதும் உள்ள 14,000க்கும் மேற்பட்ட ஏடிஎம்கள், எஸ்ஆர்எம்களை வரம்பற்ற இலவசப் பணப் பரிவர்த்தனைகளுடன் அணுக அனுமதிக்கிறது.
இந்தக் கட்டண விலக்கு, மலேசியாவில் உள்ள வங்கிகளால் இயக்கப்படும் ஏடிஎம்கள், எஸ்ஆர்எம்களுக்குப் பொருந்தும் என்று கூட்டறிக்கை தெரிவித்தது.
பேநெட்டுடன் இணைந்து செயல்படுத்தப்பட்ட இந்த முயற்சி, வாடிக்கையாளர்களுக்கு நிதிச் சேவைகளை மேலும் எளிதில் அணுகலாம்.
மேலும் அனைவரையும் உள்ளடக்கிய மலிவு விலையிலும் மாற்றுவதற்கான வங்கித் துறையின் தொடர்ச்சியான அர்ப்பணிப்பைப் பிரதிபலிக்கிறது அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
June 15, 2026, 4:30 pm
புக்கிட் ஜாலிலில் ஆடம்பர குடியிருப்பில் இயங்கிய மினி காசினோ முறியடிப்பு: 15 பேர் கைது
June 15, 2026, 3:45 pm
