நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

44 ஆண்டுகளுக்குப் பிறகு புக்கிட் கியாரா ரூமா பஞ்ஜாங் பிரச்சினைக்கு இறுதியாக தீர்வு: ஹன்னா இயோ

கோலாலம்பூர்:

கடந்த 44 ஆண்டுகளாக மாற்று வீடுகளுக்காக காத்திருந்த புக்கிட் கியாரா ரூமா பஞ்ஜாங் குடியிருப்பாளர்களின் எதிர்பார்ப்பு இன்று முதல் மாற்று வீடுகள் கட்டுமானம் தொடங்கியதன் மூலம் நிறைவேறும் கட்டத்தை எட்டியுள்ளது.

சிகாம்புட் நாடாளுமன்ற உறுப்பினரும் கூட்டரசுப் பிரதேச அமைச்சருமான ஹன்னா இயோ இதனை தெரிவித்தார்.

பல அரசாங்க நிர்வாகங்களைத் தாண்டி நீடித்த இந்த பிரச்சினைக்கு முழுமையான தீர்வு காண உறுதியுடன் செயல்பட்ட பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிமுக்கு எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

கூட்டரசு நீதிமன்றத்தின் தீர்ப்பை மதித்து, தாமான் ரிம்பா கியாராவை பாதுகாப்பதோடு, அப்பகுதி மக்களின் நலனையும் உறுதிப்படுத்திய மடானி அரசின் அணுகுமுறையால் இந்த தீர்வு சாத்தியமானது.

இந்த திட்டம், மக்களுக்கு தேவையான வீடுகளையும் சுற்றுச்சூழல் பாதுகாப்பையும் ஒரே நேரத்தில், பொதுநலன், சமூக நலனை முன்னிலைப்படுத்தும் அணுகுமுறையின் மூலம் செயல்படுத்த முடியும் என்பதை நிரூபிக்கிறது.

கடந்த 2018 முதல், புக்கிட் கியாரா வீட்டு குடியிருப்பாளர்கள், தாமான் துன் டாக்டர் இஸ்மாயில் குடியிருப்பாளர்கள், Friends of Bukit Kiara, சமூக பிரதிநிதிகள் மற்றும் பல்வேறு தரப்பினருடன் இணைந்து, தாமான் ரிம்பா கியாராவை பாதுகாத்தபடி, குடியிருப்பாளர்களுக்கு கண்ணியமான மாற்று வீடுகள் கிடைப்பதை உறுதி செய்ய நான் தொடர்ந்து பாடுபட்டேன்.


இன்று கிடைத்துள்ள இந்த தீர்வு ஒரே நாளில் ஏற்பட்டதல்ல.

பல ஆண்டுகளாக நடைபெற்ற பேச்சுவார்த்தைகள், ஆலோசனைகள் மற்றும் கலந்துரையாடல்களின் விளைவாக, அனைத்து தரப்பும் ஏற்றுக்கொள்ளக்கூடிய ஒரு நியாயமான உடன்பாடு எட்டப்பட்டது.

இந்தத் தீர்வு பின்வரும் முக்கியக் கொள்கைகளை அடிப்படையாகக் கொண்டது:

புக்கிட் கியாரா ரூமா பஞ்ஜாங் குடியிருப்பாளர்களுக்கு நீண்ட காலமாக வாக்குறுதி அளிக்கப்பட்ட மாற்று வீடுகள் வழங்கப்படும்.

கட்டுமானம் 5.76 ஏக்கர் நிலப்பரப்பில் மட்டுமே மேற்கொள்ளப்படும். மீதமுள்ள நிலம் அரசிடம் மீண்டும் ஒப்படைக்கப்பட்டு பொதுப் பூங்காவாக அறிவிக்கப்படும்.

மாற்று வீடுகள் முதலில் கட்டி முடிக்கப்பட்ட பிறகே குடியிருப்பாளர்கள் அங்கு மாற்றப்படுவார்கள்.

இடைக்கால தங்குமிடம் தேவையில்லை என்று அவர் சொன்னார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset