செய்திகள் வணிகம்
போர் நிறுத்தம் எதிரொலி: சரிந்தது எண்ணெய் விலை
தெஹ்ரான்:
உலகச் சந்தையில் கச்சா எண்ணெய் விலை சுமார் 5 விழுக்காடு சரிந்துள்ளது.
அமெரிக்காவும் ஈரானும் மத்திய கிழக்குப் போரை நிரந்தரமாக முடிவுக்குக் கொண்டுவரும் உடன்பாட்டை எட்டியுள்ளன.
ஹோர்முஸ் நீரிணையில் எண்ணெய்க் கப்பல் போக்குவரத்து மீண்டும் தொடங்கும் என்று அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் தெரிவித்தார்.
அதை அடுத்து அமெரிக்கக் கச்சா எண்ணெய் விலை 4.7 விழுக்காடு சரிந்து பீப்பாய்க்குச் சுமார் 81 டாலராகப் பதிவானது.
போர் தொடங்குவதற்கு முன்பு அதன் விலை ஏறத்தாழ 67 டாலராக இருந்தது
அனைத்துலக பிரண்ட் (Brent) கச்சா எண்ணெய் விலை சுமார் 4 விழுக்காடு குறைந்து பீப்பாய்க்கு 83.80 டாலராகப் பதிவானது.
மே மாதம் ஆக அதிகமாக அது பீப்பாய்க்கு 126.41 டாலரைத் தொட்டது.
போர் நிறுத்த ஒப்பந்தம் வெள்ளிக்கிழமை கையெழுத்தாகும் என்பதால் ஆசியப் பங்கு விலைகள் ஏற்றம் கண்டன.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
August 23, 2026, 11:18 am
மறுபயனீட்டுக்காக சிங்கப்பூரிலிருந்து மலேசியாவுக்கு அனுப்பப்படும் துணிகள்
August 17, 2026, 3:15 pm
நாசிகண்டார் மாமா கேஃப்பே தனது 7ஆவது உணவகக் கிளையை வெற்றிகரமாக திறந்தது
August 13, 2026, 4:53 pm
சிக்னேச்சர் இன்டர்நேஷனல் - கெச்சாரா இணைந்து அமைத்த புதிய உணவு விநியோகம், திறன் மேம்பாட்டு மையம்
August 12, 2026, 9:27 pm
"மீண்டும் தலைமைப் பொறுப்புக்கு என்னை நியமிக்க வேண்டாம்": டாடா சன்ஸ் தலைவர் அறிவிப்பு
July 16, 2026, 5:43 pm
ஜப்பானில் சைபர் தாக்குதல்: நிச்சிரேய் நிறுவனம் பாதிக்கப்பட்டது
July 11, 2026, 7:04 pm
