செய்திகள் மலேசியா
முன்கூட்டிய தேர்தல்களை நான் ஏற்கவில்லை; ஆனால் அவர்கள் பொறுமையற்றவர்கள்: பிரதமர்
சிரம்பான்:
முன்கூட்டிய தேர்தல்களை நான் ஏற்கவில்லை. ஆனால் அவர்கள் பொறுமையாக இருக்க மறுக்கின்றனர்.
பிரதமரும் நம்பிக்கை கூட்டணி தலைவருமான டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் இதனை கூறினார்.
நெகிரி செம்பிலான் மாநில அரசு பதவியேற்று மூன்றாவது ஆண்டில் மட்டுமே இருப்பதால், அங்கு முன்கூட்டிய தேர்தல்களை நடத்துவதை நான் ஏற்கவில்லை.
எனது அதிருப்தியை மாநில நம்பிக்கை கூட்டணி தலைவர் அமினுடின்ன் ஹரூனிடம் தெரிவித்து விட்டேன்.
ஆனால் அம்னோ கட்சியிடமிருந்து நிலவும் நிச்சயமற்ற தன்மையால் வேறு வழியில்லை என்று வலியுறுத்தியதாக அவர் வெளிப்படுத்தினார்.
அம்னோவின் 14 சட்டமன்ற உறுப்பினர்கள், அமினுடினை மந்திரி புசாராக ஆதரிப்பதை விலக்கிக் கொண்ட பின்னர், தங்கள் நிலைப்பாட்டை மாற்றிக் கொண்டனர்.
இது ஒரு போலி நாடகமாகும். மக்கள் ஒரு முடிவை எடுப்பதற்காக நாம் தேர்தல்களை நடத்த வேண்டும்.
நேற்று இரவு செரம்பானில் நெகிரி செம்பிலான் நம்பிக்கை கூட்டணி தேர்தல் கேந்திரத்தைத் தொடங்கி வைத்தபோது அவர் இவ்வாறு கூறினார்.
மேலும் நெகிரி செம்பிலானை தொடர்ந்து ஜொகூரில் மாநில அரசின் பதவிக்காலம் இன்னும் ஓராண்டு மீதமுள்ளது.
இந்த நிலையில், அங்கு முன்கூட்டியே தேர்தல்களை நடத்த அழைப்புகள் விடுக்கப்பட்ட போதிலும், அம்னோவின் பொறுமையின்மையை அவர் விமர்சித்தார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
June 15, 2026, 5:01 pm
ஜூலை 1 முதல் அனைத்து ஏடிஎம்களிலும் பணம் எடுப்பதற்கு 1 ரிங்கிட் கட்டணம் இல்லை
June 15, 2026, 4:30 pm
புக்கிட் ஜாலிலில் ஆடம்பர குடியிருப்பில் இயங்கிய மினி காசினோ முறியடிப்பு: 15 பேர் கைது
June 15, 2026, 3:45 pm
ஜொகூர், நெகிரி செம்பிலான் தேர்தல்களுக்கு காவல்துறை தீவிரமான தயாரிப்பில் உள்ளது
June 15, 2026, 3:04 pm
