நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

தேசியக் கூட்டணி உச்சமன்றக் கூட்டத்திற்குப் பிறகு எம்ஐபிபி கட்சி தனது அரசியல் திசையை முடிவு செய்யும்: சதீஸ்குமார்

கோலாலம்பூர்:

தேசியக் கூட்டணியின் உச்சமன்றக் கூட்டத்திற்குப் பிறகே மலேசிய இந்திய மக்கள் கட்சி (எம்ஐபிபி) தனது அரசியல் திசையை முடிவு செய்யும்.

அக்கட்சியின் பொதுச் செயலாளர் என். சதீஸ்குமார் இதனை தெரிவித்தார்.

நேற்று நெகிரி செம்பிலானில் நடைபெற்ற கட்சியின் மத்தியக் குழுவின் கூட்டத்தில், கடந்த சில வாரங்களாக பல அரசியல் கட்சிகளுடன் பல்வேறு விதமான ஈடுபாடுகள், கலந்துரையாடல்கள் உட்பட, அரசியல் களத்தின் வளர்ச்சி குறித்தும் விவாதிக்கப்பட்டது.

கட்சி, இந்திய சமூகத்தின் நலன்களுக்குப் பொருத்தமானதாகக் கருதப்படும் எந்தவொரு கலந்துரையாடல், ஈடுபாடு, அரசியல் திசையைத் தொடர்வதற்கு எம்ஐபிபி தலைவர் பி. புனிதனுக்கு மத்திய செயற்குழு முழுமையான அதிகாரத்தை வழங்கியுள்ளது என்று அவர் ஓர் அறிக்கையில் கூறினார்.

முன்னதாக, மத்திய செயற்குழுக் கூட்டத்திற்குப் பிறகே எம்ஐபிபி தனது அரசியல் திசையை இறுதி செய்யும் என்று புனிதன் கூறியிருந்தார்.

பெர்சத்துவுடனான தனது அரசியல் உறவுகளை பாஸ் முறித்துக்கொண்டதைத் தொடர்ந்து தேசியக் கூட்டணிக்குள் ஏற்பட்ட குழப்பங்களுக்கு மத்தியில், பாஸ், நம்பிக்கை கூட்டணி, தேசிய முன்னணி ஆகிய கட்சிகள் ஒவ்வொன்றும் எம்ஐபிபிக்கு அழைப்புகளை விடுத்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset