செய்திகள் மலேசியா
இந்தியா கேட் உணவகம் தனது 14ஆவது கிளையை புக்கிட் பிந்தாங்கில் திறந்தது: சரவணன்
கோலாலம்பூர்:
பாரம்பரிய இந்திய உணவகமான இந்தியா கேட், தனது 14ஆவது கிளையை புக்கிட் பிந்தாங்கின் சாங்காட்டில் தொடங்கியுள்ளது.
அதே வேளையில், 15ஆவது கிளை அடுத்த மாதம் ஐஓஐ டாமன்சாராவில் திறக்க திட்டமிடப்பட்டுள்ளது.
தியாகம், தைரியம், உறுதி, அசைக்க முடியாத நம்பிக்கை ஆகியவற்றின் மூலம் கட்டமைக்கப்பட்ட நிறுவனத்தின் பயணத்தை இந்தப் புதிய கிளையின் திறப்பு அடையாளப்படுத்துகிறது என்று இந்தியா கேட்டின் நிறுவனர் சரவணன் சுப்ரமணியம் கூறினார்.
2017இல் இந்தியா கேட் தனது செயல்பாடுகளைத் தொடங்கியபோது, மலேசிய சமூகத்திற்கு உயர் தரமான சேவை, விருந்தோம்பல் தரங்களுடன் உண்மையான இந்திய சுவைகளை அறிமுகப்படுத்துவது என்ற ஒரே ஒரு தொலைநோக்குப் பார்வையை மட்டுமே நிறுவனம் கொண்டிருந்தது.
இந்தப் பயணம் எளிதானதாக இருக்கவில்லை.
நாங்கள் பல்வேறு சவால்கள், சிரமங்கள் மற்றும் நிச்சயமற்ற தன்மைகளை எதிர்கொண்டோம்.
இருப்பினும், ஒவ்வொரு சவாலும் எங்களை மேலும் வலிமையாகவும், பக்குவமாகவும், தொடர்ந்து வளரத் தயாராகவும் ஆக்கியுள்ளது.
விசுவாசமான வாடிக்கையாளர்களின் ஆதரவு, ஊழியர்களின் அர்ப்பணிப்பு, வணிகப் பங்காளர்களின் நம்பிக்கை மற்றும் குடும்பத்தினர், நண்பர்களின் பிரார்த்தனைகள் ஆகியவற்றின் விளைவாக, இந்தியா கேட் இப்போது நாடு முழுவதும் 15 கிளைகளாக விரிவடைந்துள்ளது என்று அவர் இன்று இங்குள்ள கிளையின் அதிகாரப்பூர்வ திறப்பு விழாவில் கூறினார்.
கிளைகளின் எண்ணிக்கை அதிகரிப்பதில் இருந்து மட்டுமல்லாமல், தேசிய, அனைத்துலக அளவிலான பல்வேறு சாதனைகளாலும் இந்தியா கேட்டின் வளர்ச்சி வலுப்பெறுகிறது.
அடையப்பட்ட சாதனைகளில், மலேசியாவில் ஒரு இந்திய உணவகச் சங்கிலியால் செய்யப்பட்ட அதிகபட்ச பிரியாணி விற்பனை, மலேசியாவில் அதிகபட்ச ரொட்டி நான் விற்பனை ஆகிய பிரிவுகளுக்காக மலேசிய சாதனைப் புத்தகத்திடமிருந்து அங்கீகாரம் பெற்றதும் அடங்கும்.
மேலும், ஆசியான் அளவில் ஒரு இந்திய உணவகச் சங்கிலியால் செய்யப்பட்ட அதிகபட்ச பிரியாணி விற்பனை என்ற பிரிவில் ஆசியான் சாதனைகள் அமைப்பிடமிருந்தும், ஆசிய அளவில் அதே பிரிவில் ஆசியா சாதனைகள் அமைப்பிடமிருந்தும் இந்தியா கேட் அங்கீகாரம் பெற்றுள்ளது.
மலேசியாவின் இஸ்லாமிய மேம்பாட்டுத் துறையிடமிருந்து ஹலால் சான்றிதழைப் பெற்ற முதல் இந்திய உயர்தர உணவகம் என்ற பெருமையைத் தங்கள் நிறுவனம் பெற்றது, மற்றொரு முக்கிய சாதனையாகும்.
இந்தச் சான்றிதழ், தரநிலைகள், சுகாதாரம், உணவுப் பாதுகாப்பு, வாடிக்கையாளர் நம்பிக்கை ஆகியவற்றில் எங்கள் அர்ப்பணிப்பை நிரூபிக்கிறது என்று சரவணன் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
June 13, 2026, 4:07 pm
ஜொகூர், நெகிரி செம்பிலான் மாநிலத் தேர்தல்களில் பெஜுவாங் போட்டியிடும்: முக்ரிஸ்
June 13, 2026, 4:06 pm
தேர்தல் ஆணையத்தின் அதிகாரத்தை கேள்விக்குட்படுத்த வேண்டாம்: ஜாஹித்
June 13, 2026, 4:04 pm
