நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

தாமான் கோத்தா செராஸ் ஸ்ரீ மகா முண்டகக்கண்ணி அம்மன் ஆலயத் திருப்பணிக்கு மானியம்: சுரேஸ் சிங் அறிவிப்பு

காஜாங்:

செராஸ் பத்தாவது மைல் தாமான் கோத்தா செராஸில் அருள் பாலித்துக் கொண்டிருக்கும் ஸ்ரீ மகா முண்டகக்கண்ணி அம்மன் ஆலயத்தின் கட்டுமான பணிக்கு கண்டிப்பாக உதவுவேன் என்று இலக்கவியல்  அமைச்சர் கோபிந்த் சிங் டியோவின் சிறப்பு அதிகார சுரேஸ் சிங் தெரிவித்தார்.

புற்று நாகத்துடன் இந்த ஸ்ரீ மகா மூண்டகக்கண்ணி அம்மன் கடந்த 53 ஆண்டுகளுக்கு முன்பு உருவானது.

மேலும் பல இங்குள்ள குடியிருப்பாளர்கள் அம்பாளின் பல்வேறு வடிவங்களைக் கண்டு இன்று வரை பயபக்தியுடன் அம்மனை வழிபட்டு வருகின்றனர்

இப்போது இந்த ஆலயம் 15 லட்சம் ரிங்கிட் செலவில் கம்பீரமாக கட்டப்பட்டு வருவதாக ஆலயத் தலைவர் டாக்டர் கனகசுந்தரம் தெரிவித்தார்.

இதுவரை எட்டு லட்சம் வெள்ளியில் ஆலயம் கட்டப்பட்டுள்ளது.

மேலும் திருப்பணி பூர்த்தி அடைய ஐந்து லட்சம் ரிங்கிட் தேவைப்படுவதாக அவர் சொன்னார்.

ஆலயம் சுற்றிலும் மதிசுவர் எழுப்புதல், மண்டபம், பளிங்கு கற்கள் பொருத்துதல் உட்பட திருப்பணி வேலைகள் அனைத்தையும் கட்டம் கட்டமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்று அவர் சொன்னார்.

இதனிடையே இன்று காலையில் மாண்புமிகு சுரேஸ் சிங் டியோ, செனட்டர் தியாகராஜா ஆகியோர் கோவிலுக்கு சிறப்பு வருகை புரிந்தனர்.

கோவில் நிர்வாகத்தின் சார்பில் இருவருக்கும் பொன்னாடை போர்த்தி மாலை அணிவித்து சிறப்பு செய்யப்பட்டது.

பின்னர் கோவில் நிர்வாகத்தினர் திருப்பணிக்கு உதவும் படி சுரேஸ் சிங்கை கேட்டுக் கொண்டனர்.

இலக்கவியல் துறை அமைச்சர் கோபிந்த் சிங் டியோ சார்பில் திருப்பணிக்கு 10,000 ரிங்கிட் வழங்கப்படும் என்று சுரேஸ் சிங் தெரிவித்தார்.

மேலும் கூடுதல் நிதி கொடுக்க முயற்சிகள் மேற்கொள்ளப்படும்.

அதேசமயம் வீடமைப்பு ஊராட்சி துறை அமைச்சு,  மனிதவள அமைச்சர் டத்தோஸ்ரீ இரமணன் மூலமாக மானியம் பெற்றுத் தர முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என்று சுரேஸ் சிங் தெரிவித்தார்.

புதிய செனட்டராக அண்மையில் பதவி ஏற்ற தியாகராஜா கூறுகையில் கோவில் திருப்பணிக்கு அனைத்து உதவிகளையும் வழங்குவேன் என்றார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset