செய்திகள் மலேசியா
உள்ளத்தில் இருப்பது புலியாக இருந்தாலும் வெளியே வருவது ஆடாக தான் இருக்க வேண்டும்: ஜசெக தலைவர்களுக்கு ஜாஹித் நினைவூட்டு
கோலாலம்பூர்:
அரசியல் கூட்டாளிகளை அனைத்து கட்சிகளும் மதிக்கக் கற்றுக் கொள்ள வேண்டும்.
அவசர அறிக்கைகளை வெளியிடக்கூடாது என்று ஜசெக தலைவர்களுக்கு நினைவூட்டப்படுவதாக டத்தோஸ்ரீ டாக்டர் அஹ்மத் ஜாஹித் ஹமிடி கூறினார்.
இன்றைய அரசியல் களத்தில் உள்ள ஒவ்வொரு கூட்டாளியும் ஒற்றுமை எனும் கொள்கையை எப்போதும் மதிக்க வேண்டும்.
ஒருவருக்கொருவர் உணர்வுப்பூர்வமாக நடந்துகொள்ள வேண்டும்.
அவர்கள் தங்கள் நண்பர்களை மதிக்கக் கற்றுக்கொள்ள வேண்டும். அலட்சியமாகப் பேசாதீர்கள்.
ஜசெக தலைவர்கள்.அப்படி நடந்துகொள்வார்கள் என்று நான் நினைக்கவில்லை.
மேலும் அவர்கள் அரசியலில் கூட்டாண்மைக் கொள்கைகளை மதிக்க வேண்டும்.
உள்ளத்தில் இருப்பது புலியாக இருக்கட்டும். வெளியே வருவது வெறும் ஆடாக' இருக்க வேண்டும். இதைத்தான் அவர்கள் கற்றுக்கொள்ள வேண்டும்.
கோலாலம்பூர் மாநாட்டு மையத்தில் நடைபெற்ற 4ஆவது தென்கிழக்கு ஆசிய அறிஞர்கள் மாநாடு 2026ஐத் தொடங்கி வைத்த பின்னர் நடந்த செய்தியாளர் சந்திப்பில் அவர் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
June 13, 2026, 4:07 pm
ஜொகூர், நெகிரி செம்பிலான் மாநிலத் தேர்தல்களில் பெஜுவாங் போட்டியிடும்: முக்ரிஸ்
June 13, 2026, 4:06 pm
தேர்தல் ஆணையத்தின் அதிகாரத்தை கேள்விக்குட்படுத்த வேண்டாம்: ஜாஹித்
June 13, 2026, 4:04 pm
