செய்திகள் மலேசியா
"வைரலாகும் வரை காத்திருக்க வேண்டாம்": பாலியல் குற்றச்சாட்டுகளில் உடனடி நடவடிக்கை அவசியம் என கல்வி அமைச்சர் எச்சரிக்கை
ஜோர்ஜ்டவுன்:
மாணவர்கள் சம்பந்தப்பட்ட பாலியல் குற்றப் புகார்கள் சமூக ஊடகங்களில் வைரலாகும் வரை காத்திருக்காமல் உடனடி நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும் என்று பள்ளி நிர்வாகங்கள், மாநில கல்வி துறை, மாவட்ட கல்வி அலுவலகங்கள் ஆகியவற்றிடம் கல்வி அமைச்சு (KPM) நினைவூட்டியுள்ளது.
"பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளானதாக பிள்ளைகள் முறையிட்டால் பெற்றோர்களும், ஆசிரியர்களும் உடனடி தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலதிக விசாரணை, நடவடிக்கைகாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் புகார் அளிக்க வேண்டும்.
பின்னர், பாதிக்கப்பட்ட குழந்தை சமூக நலத் துறையின் மூலம் பாதுகாப்பும் முறையான சிகிச்சையும் அளிக்கப்படும்," என கல்வி அமைச்சர் ஃபத்லினா சிடேக் தெரிவித்துள்ளார்.
"ஆகையால், மாவட்ட கல்வி அலுவலகங்கள் இம்மாதிரியான வழக்குகளில் கூடுதல் கவனத்துடன் செயல்பட வேண்டும். பாலியல் வன்கொடுமை சம்பந்தப்பட்ட புகார்கள் சமூக ஊடகங்களில் பரவுவதற்கு முன்னதாகவே தீவிர நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும்," என தேசிய வகை ஹெங் ஈ சீனப்பள்ளியின் புதிய கட்டடம் அமைப்பதற்கான அனுமதி அறிக்கை வழங்கும் நிகழ்வில் கலந்து கொண்ட அவர் செய்தியாளர்களிடம் இவ்வாறு கூறினார்.
சமீபத்தில் சமூக ஊடகங்களில் பரபரப்பாக பேசப்பட்டு பின்னர் அதிகாரிகளின் கவனத்திற்குக் கொண்டு வரப்பட்ட , சரவாக்கில் 16 வயது மானவியைப் பாலியல் துஷ்பிரயோகம் செய்து கர்பமாக்கிய ஆசிரியரின் வழக்கு விசாரணை தொடர்பான கேள்விகள் கேட்கப்பட்டபோது கல்வி அமைச்சர் இதனை தெரிித்தார்.
சம்பந்தப்பட்ட ஆசிரியர் மீது போலிஸில் புகார் அளிக்கப்பட்டு அவர் தற்போது மாவட்ட கல்வி அலுவலகத்தில் பணியமர்த்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்வர்களுக்கு முறையான பாதுகாப்பு வழங்கப்படும் பொருட்டு பொதுமக்கள் இம்மாதிரியான வழக்குகளைச் சமூக ஊடகங்களில் பரப்பாமல் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் உடனடியாக புகார் அளிக்கும்படி கேட்டு கொள்ளப்படுவதாக அவர் வலியுறுத்தினார்.
-சங்கீர்த்தனா
தொடர்புடைய செய்திகள்
June 13, 2026, 4:07 pm
ஜொகூர், நெகிரி செம்பிலான் மாநிலத் தேர்தல்களில் பெஜுவாங் போட்டியிடும்: முக்ரிஸ்
June 13, 2026, 4:06 pm
தேர்தல் ஆணையத்தின் அதிகாரத்தை கேள்விக்குட்படுத்த வேண்டாம்: ஜாஹித்
June 13, 2026, 4:04 pm
