செய்திகள் மலேசியா
நெகிரி செம்பிலான் மாநில அரசுக்கு துரோகம் செய்த அம்னோவை வாக்காளர்கள் தண்டிக்க வேண்டும்: அமினுடின்
சிரம்பான்:
ஆகஸ்ட் 1ஆம் தேதி நடைபெறும் மாநிலத் தேர்தலை சாதகமாகப் பயன்படுத்தி அம்னோவை நெகிரி செம்பிலான் வாக்காளர்கள் தண்டிக்க வேண்டும்.
மாநில அரசுக்கு அக்கட்சி செய்த துரோகமே மாநில சட்டமன்றம் கலைக்கப்படுவதற்கு வழிவகுத்தது என்று மாநில நம்பிக்கை கூட்டணி தலைவர் அமினுடின் ஹரூன் கூறினார்.
பெர்சத்து தலைவர் டான்ஸ்ரீ மொஹைதின் யாசின், பாஸ் தலைவர்களுக்கு எழுதியதாகக் கூறப்படும் ஒரு கடிதம், என்னை மந்திரி புசார் பதவியிலிருந்து கவிழ்ப்பதற்கான முயற்சிகள் குறித்து தேசியக் கூட்டணிக்கும் அம்னோவுக்கும் இடையே நடந்த பேச்சுவார்த்தைகளை வெளிப்படுத்தியுள்ளது.
நம்பிக்கை கூட்டணி, தேசிய முன்னணி கூட்டணிகளால் அமைக்கப்பட்ட மாநிலக் கூட்டணி அரசாங்கத்தை வழிநடத்தும் என் மீது நம்பிக்கை இழந்ததாக 14 அம்னோ சட்டமன்ற உறுப்பினர்கள் அறிவித்தனர்.
இதனால் ஏற்பட்ட அரசியல் குழப்பத்தைத் தொடர்ந்து, சட்டமன்றத்தின் பதவிக்காலம் முடிவடைவதற்கு இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே கடந்த வாரம் மாநில சட்டமன்றத்தைக் கலைக்கப்படுவதாக அறிவித்தேன்.
இந்நிலையில் அம்னோ உறுப்பினர்கள் அரசாங்கத்துடனேயே நீடிக்க ஒப்புக் கொண்டனர்.
ஆனால் அக்கட்சி அனைத்து இடங்களிலும் போட்டியிடும் என அறிவித்ததால், நம்பிக்கை கூட்டணியும் அவ்வாறே செய்தது.
வாக்குப்பதிவு நாளன்று 80% வாக்காளர் வெளியே வந்து வாக்களிக்க வேண்டும். நம்பிக்கை கூட்டணி ஆதரவாளர்கள் பெருமளவில் திரண்டு வர வேண்டும்.
மாநில அரசுக்கு துரோகம் செய்த அம்னோவை வாக்காளர்கள் தண்டிக்க வேண்டும் என்று அவர் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
June 13, 2026, 4:07 pm
ஜொகூர், நெகிரி செம்பிலான் மாநிலத் தேர்தல்களில் பெஜுவாங் போட்டியிடும்: முக்ரிஸ்
June 13, 2026, 4:06 pm
தேர்தல் ஆணையத்தின் அதிகாரத்தை கேள்விக்குட்படுத்த வேண்டாம்: ஜாஹித்
June 13, 2026, 4:04 pm
