நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

தேர்தல் ஆணையத்தின் அதிகாரத்தை கேள்விக்குட்படுத்த வேண்டாம்: ஜாஹித்

கோலாலம்பூர்:

ஜொகூர், நெகிரி செம்பிலான் மாநிலங்களுக்குத் தனித்தனியாகத் தேர்தல்களை நடத்தும் முடிவு குறித்த விமர்சனங்களைத் தொடர்ந்து, தேர்தல் ஆணையத்தின் அதிகாரத்தை துணைப் பிரதமர் டத்தோஸ்ரீ ஜாஹித் ஹமிடி ஆதரித்துப் பேசினார்.

தேர்தல் தேதியை நிர்ணயிப்பது தேர்தல் ஆணையத்தின் உரிமையும் அதிகாரமும் ஆகும்.

எனவே எந்தவொரு கட்சியும் அந்த முடிவை கேள்விக்குட்படுத்துவது பொருத்தமற்றது.

அது தேர்தல் ஆணையத்தின் உரிமையும் அதிகாரமும் ஆகும்.

அமைச்சரவை உறுப்பினர்களாக இருக்கும் நிலையில், எந்தவொரு தனிநபரும் அத்தகைய தனிப்பட்ட கருத்தைக் கொண்டிருப்பது பொருத்தமற்றது.

தற்போதைய அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் ஏதேனும் ஒரு கட்சியின் முக்கியத் தலைவராக ஒருவர் இது குறித்து பேசினால் அதைப்பற்றி இன்னும் என்ன சொல்வது என்று எனக்கு தெரியவில்லை.

கோலாலம்பூர் மாநாட்டு மையத்தில் நடைபெற்ற 4ஆவது தென்கிழக்கு ஆசிய அறிஞர்கள் மாநாட்டைத் தொடங்கி வைத்த பிறகு நடந்த செய்தியாளர் சந்திப்பில் அவர் கூறினார்.

முன்னதாக நேற்று ஜசெக துணைத் தலைவர் ங்கா கோர் மிங், ஜொகூர், நெகிரி செம்பிலான் மாநிலத் தேர்தல்களுக்குத் தனித்தனி தேதிகள் குறித்த தேர்தல் ஆணையத்தின் விளக்கத்தை அர்த்தமற்றது என்று விவரித்தார்.

- பார்த்திபன் நாகராஜன்


தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset