நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

ஜொகூர், நெகிரி செம்பிலான் மாநிலத் தேர்தல்களில் பெஜுவாங் போட்டியிடும்: முக்ரிஸ்

கோலாலம்பூர்:

பெஜுவாங் கட்சி ஜொகூர், நெகிரி செம்பிலான் மாநிலத் தேர்தல்களில் வேட்பாளர்களை நிறுத்தும்.

ஆனால் பல தொகுதிகளில் போட்டியிடத் திட்டமிடவில்லை.

இந்த முறை தனது கட்சி அதன் சொந்த திறன்களுக்கு ஏற்ப போட்டியிடும் என்று அதன் தலைவர் டத்தோஸ்ரீ முக்ரிஸ் மகாதீர் கூறினார்.

மற்ற கட்சிகளுடன் ஒத்துழைப்பதன் மூலமும் நாங்கள் செயல்படுவோம்.

மற்ற அரசியல் கூட்டாளிகளுடன் மோதல்கள் ஏற்படக்கூடாது என்று நாங்கள் நம்புகிறோம்.

அதனால்தான் பேச்சுவார்த்தை செயல்முறை இறுதி கட்டத்தை எட்டவில்லை என்றாலும் ஏற்கெனவே தொடங்கிவிட்டது.

இதுவரை மூன்று அரசியல் கட்சிகளுடன் பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டுள்ளது என்று முக்ரிஸ் கூறினார்.

இதனிடையே முக்ரிஸின் தந்தை துன் டாக்டர் மகாதீர் முகமது ல்  நிறுவப்பட்ட
பெஜுவாங் கட்சிக்கு தற்போது எந்த இடங்களும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset