செய்திகள் வணிகம்
அமெரிக்க டாலரின் எழுச்சியால் சரிவு கண்ட மலேசிய ரிங்கிட்
கோலாலம்பூர்:
அமெரிக்க தொழிலாளர் சந்தையின் எதிர்பார்ப்புகளை மீறிய வலுவான செயல்திறன், அமெரிக்க டாலருக்கு புதிய பலத்தை அளித்துள்ள நிலையில், மலேசிய ரிங்கிட் இன்று ஆரம்ப வர்த்தகத்தில் அமெரிக்க டாலருக்கு எதிராக சற்று சரிவைக் கண்டது. இருப்பினும், பெரும்பாலான முக்கிய உலக நாணயங்களுக்கு எதிராக ரிங்கிட் முன்னிலை வகித்தது.
காலை 8 மணியளவில், ரிங்கிட் அமெரிக்க டாலருக்கு எதிராக 4.0470/0520 என்ற அளவில் வர்த்தகமானது. இது கடந்த வெள்ளிக்கிழமை பதிவான 4.0280/0320 என்ற நிலையை விட பலவீனமானதாகும்.
மே மாதத்தில் அமெரிக்க தொழிலாளர் சந்தை உறுதியான வளர்ச்சியைக் காட்டியதைத் தொடர்ந்து அமெரிக்க டாலர் குறியீடு (DXY) 100.069 புள்ளிகளாக உயர்ந்ததாக மலேசிய முவமாலாட் வங்கியின் தலைமைப் பொருளாதார நிபுணர் டாக்டர் முஹம்மத் அப்ஸானிசம் அப்துல் ரஷித் தெரிவித்தார்.
விவசாயம் அல்லாத ஊதியப் பட்டியல் (NFP) 172,000 ஆக பதிவாகி, 85,000 என்ற சந்தை மதிப்பீட்டை வெகுவாக முறியடித்துள்ளது. அதேவேளை, வேலையின்மை விகிதம் 4.3 சதவீதமாக நிலைத்திருந்தது என்று மேலும் அவர் கூறியுள்ளார்.
"இந்த வலுவான பொருளாதாரத் தரவுகள், ஜூன் 16. 17ஆம் தேதிகளில் நடைபெறவுள்ள பெடரல் ஓபன் மார்க்கெட் கமிட்டி (FOMC) கூட்டத்தில், அமெரிக்க பெடரல் ரிசர்வ் தனது கடுமையான பணவியல் நிலைப்பாட்டைத் தொடர வாய்ப்புள்ளதாக காட்டுகின்றன," என்று அவர் பெர்னாமாவிடம் தெரிவித்தார்.
இதற்கிடையில், முக்கிய உலக நாணயங்களுடன் ஒப்பிடுகையில் ரிங்கிட் வலுவான நிலையை வெளிப்படுத்தியது.
பிரிட்டிஷ் பவுண்டுக்கு எதிராக 5.4233/4287 இருந்து 5.3963/4029 ஆகவும், யூரோவுக்கு எதிராக 4.6882/6928 இருந்து 4.6630/6687 ஆகவும் ரிங்கிட் முன்னேற்றம் கண்டது.
எனினும், ஜப்பானிய யெனுக்கு எதிராக 2.5183/5209 இருந்து 2.5240/5273 ஆக சற்று சரிவடைந்தது.
பிராந்திய நாணயங்களுடனான வர்த்தகத்திலும் கலவையான நிலை காணப்பட்டது.
சிங்கப்பூர் டாலருக்கு எதிராக 3.1390/1424 இருந்து 3.1343/1384 ஆகவும், தாய்லாந்து பாட் நாணயத்திற்கு எதிராக 12.3433/3605 இருந்து 12.3219/3446 ஆகவும் ரிங்கிட் வலுப்பெற்றது.
ஆனால், பிலிப்பைன் பெசோவுக்கு எதிராக 6.55/6.56 இருந்து 6.58/6.59 ஆகவும், இந்தோனேசிய ரூப்பியாவுக்கு எதிராக 223.3/223.6 இருந்து 224.3/224.7 ஆகவும் ரிங்கிட் சற்று பின்னடைவைச் சந்தித்தது.
இன்று காலையில் ஒரு ரிங்கிட், இந்திய ரூபாய் 23.40க்கு பரிவர்த்தனை ஆனது.
உலக பொருளாதாரச் சூழல், அமெரிக்காவின் வலுவான வேலைவாய்ப்பு தரவுகள் சந்தைகளில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ள போதிலும், முக்கிய நாணயங்களுக்கு எதிராக ரிங்கிட் தொடர்ந்து உறுதியான நிலையை வெளிப்படுத்தி வருவது முதலீட்டாளர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
- சங்கீர்த்தனா
தொடர்புடைய செய்திகள்
October 5, 2026, 10:07 pm
டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு தொடர்ந்து சரிவு
October 5, 2026, 3:40 pm
சீரகத் தூளில் பூச்சிக்கொல்லி மருந்து: உடனடியாக அகற்ற இந்திய அரசு உத்தரவு
September 26, 2026, 12:30 pm
வட அமெரிக்காவில் மேலும் 250 கடைகளை மூடும் Starbucks
September 11, 2026, 4:22 pm
ஃபேன்சி அகாடாமி அணிச்சல், பேக்கரி துறையில் திறமையான சாதனையாளர்களை உருவாக்கும்: விக்னேஸ்வரி நம்பிக்கை
September 11, 2026, 3:07 pm
இந்தியாவில் iPhone விலை 41% வரை அதிகரிப்பு
September 6, 2026, 5:39 pm
சிங்கப்பூரில் curry puff வாங்க சீனாவிலிருந்து வந்த விநியோக ஊழியர்
September 2, 2026, 4:36 pm
இந்தியாவின் முன்னணி பெருங்காய நிறுவனங்களான எல்ஜி, எவரெஸ்ட் நிறுவனப் பெருங்காயங்கள் விற்பனைக்கு தடை
August 31, 2026, 8:14 pm
சிங்கப்பூரில் உத்தரவாதமில்லாக் கடன் பெறுவோர் - மறுபரிசீலனை செய்ய 3 நாள் அவகாசம்
August 30, 2026, 9:46 pm
கே8 சரக்குகளைக் கையாள்வது குறித்து அரசும், ஏஜென்சிகளும் தெளிவுபடுத்த வேண்டும்
August 26, 2026, 11:58 am
